• Tag results for ரஜினி

சிவாஜி கணேசன் மணிமண்டபம் திறப்பு விழா

நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் மணி மண்டபம் சென்னை அடையாறில் துணை முதல்வர் ஓபிஎஸ் பன்னீர் செல்வம் திறந்து வைத்தார். இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், சரத்குமார், நாசர், விஜயகுமார், கார்த்தி, விஷால் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்வில் பேசிய பிரபு, மணி மண்டபம் அமைய காரணமாக இருந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்தார். அதேபோல் சிவாஜி சிலையை அமைத்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதிக்கும் நன்றி தெரிவித்தார். தொடர்ந்து அமைச்சர்கள், திரையுலகப் பிரபலங்கள் சிவாஜி கணேசன் குறித்த சாதனைகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.

published on : 2nd October 2017

முரசொலி பவளவிழா

பவள விழாவை முன்னிட்டு முரசொலி அலுவலக வளாகத்தில் ‘முரசொலி காட்சி அரங்கம்’ திறக்கப்பட்டது. நிகழ்ச்சியில் நடிகர் ரஜினிகாந்த் பார்வையாளராகக் கலந்துகொண்டார். நடிகர் கமல்ஹாசன் சிறப்பு விருந்தனராகப் பங்கேற்றுள்ளார். இதில் திமுக செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், முதன்மைச் செயலாளர் துரைமுருகன், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, தமிழக காங்கிரஸ் தலைவர் சு. திருநாவுக்கரசர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மத்தியக் குழு உறுப்பினர் டி.கே.ரங்கராஜன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் அகில இந்தியத் தலைவர் கே.எம்.காதர் மொய்தீன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், எம்ஜிஆர் கழகத் தலைவர் ஆர்.எம்.வீரப்பன், மனிதநேய மக்கள் கட்சித் தலைவர் எம்.எச். ஜவாஹிருல்லா, தினமணி ஆசிரியர் வைத்தியநாதன், இந்து ஆசிரியர் ராம், விகடன் குழும தலைவர் ஸ்ரீநிவாசன், தினத்தந்தி தலைமைப் பொது மேலாளர் சந்திரசேகரன், நக்கீரன் ஆசிரியர் கோபால் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

published on : 11th August 2017

விஐபி-2

முதல் பாகத்துக்கு கிடைத்த வெற்றியால், இரண்டாம் பாகத்தை எடுத்துள்ளனர் சௌந்தர்யா ரஜினிகாந்த். இதில் அமலாபால், சமுத்திரகனி, விவேக் என முதல்பாகத்தில் நடித்தவர்களே இந்தப் படத்திலும் நடித்திருக்கிறார்கள்.

published on : 19th July 2017

காலா ஷூட்டிங் ஸ்பாட் ஸ்டில்ஸ்

இயக்குநர் ரஞ்சித்தின் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடிக்கும் ‘காலா’ படத்தின் படப்பிடிப்பு ஸ்டில்ஸ்.

published on : 11th June 2017

ரஜினி உருவ பொம்மை எரிப்பு

சென்னையில் நடிகர் ரஜினிகாந்த் கடந்த வாரம் தனது ரசிகர்களை மாவட்டம் வாரியாக சந்தித்து, புகைப்படம் எடுத்து கொண்டார். அப்போது, அரசியலுக்கு பிரவேசம் குறித்து பேசிய ரஜினிக்கு எதிர்ப்பு தெரிவித்து, போயஸ் கார்டன் அருகில் உள்ள கதீட்ரல் சாலையில் தமிழர் முன்னேற்றப்படையைச் சேர்ந்த வீரலட்சுமியின் தலைமையில் ரஜினியின் உருவ பொம்மையை எரித்து ஆர்ப்பாட்டத்திலும், அவருக்கு எதிராக கோஷங்கள் எழுப்பியும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

published on : 22nd May 2017

5வது நாளாக ரசிகர்களை சந்தித்தார் ரஜினி

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தொடர்ந்து 5வது நாளாக நடிகர் ரஜினிகாந்த் ரசிகர்களை சந்தித்தார். கடைசி நாளான இன்று நிகழ்ச்சியில் சென்னை உள்ளிட்ட 4 மாவட்ட ரசிகர்கள் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். அப்போது அவர் 20 வருடங்களுக்கு முன்பிருந்த ரசிகர்கள், இப்போதும் அதே உற்சாகத்துடன்தான் இருக்கிறார்கள். அவர்களை நான் நேரடியாகப் பார்க்கும்போது, சிலருக்கு வயதாகிவிட்டதை நினைத்து எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது என்றார்.

published on : 19th May 2017

4வது நாளாக ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

தொடர்ந்து நான்காவது நாளாக தனது ரசிகர்களை சந்தித்து நடிகர் ரஜினிகாந்த் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்துக் கொண்டார். நடிகர் ரஜினிகாந்த் கடந்த 3 நாட்களாக கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி, திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்களை சந்தித்து புகைப்படம் எடுத்துக்கொண்டனர். இன்று 4வது நாளாக சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

published on : 18th May 2017

3வது நாளாக ரசிகர்களுடன் ரஜினி சந்திப்பு

3-வது நாளான இன்று விழுப்புரம், திருவண்ணாமலை, சிவகங்கை மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்களை சந்தித்தார். அட்டையுடன் வந்த 3 மாவட்டங்களையும் சேர்ந்த 750 ரசிகர்களும் ராகவேந்திரா மண்டபத்தின் வரிசை எண்களின்படி ரஜினியை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டனர்.

published on : 18th May 2017

3வது நாளாக ரஜினியுடன் ரசிகர்கள் சந்திப்பு

பல்வேறு மாவட்டங்களை ரசிகர்களை கடந்த 2 நாட்களாக நேரில் சந்தித்து, ரசிகர்களுடன் புகைப்படம் எடுக்க வரும் ரஜினிகாந்த், நேற்றும், நேற்று முன்தினமும் கன்னியாகுமரி, கரூர், திண்டுக்கல், நெல்லை, தூத்துக்குடி, தேனி மாவட்டத்தை சேர்ந்த ரசிகர்களுடன் ரஜினியுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டனர். 3வது நாளாக இன்று சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் புகைப்படம் எடுக்கும் பணி தொடங்கியதும் திருவண்ணாமலை, சிவகங்கை, விழுப்புரம் மாவட்டங்களை சேர்ந்த ரசிகர்கள், ரஜினியுடன் புகைப்படம் எடுத்தனர்.

published on : 17th May 2017

விண்டேஜ் கார்

நாகரிக வளர்ச்சிக்கு ஏற்ப பல சொகுசு கார்கள் சந்தையில் அறிமுகமானாலும், பழங்கால கார்களுக்கு என்றுமே மவுசு குறையாது என்பதை பறைசாற்றும் வகையில், மறைந்த முதல்வரும் நடிகருமான எம்.ஜி.ஆர் மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த திரைப்படங்களில் பயன்படுத்திய விண்டேஜ் கார்.

published on : 17th May 2017

ரஜினி அரசியல் பிரவேசம்!

சென்னை கோடம்பாக்கத்தில் நடைபெற்ற ரசிகர்களுடான சந்திப்பு நிகழ்ச்சியில் ரஜினியின் அரசியல் பேச்சு அதிர்வலைகளை எழுப்பியுள்ளது. இந்நிலையில், 'இன்றைக்கு  நான் மக்களை மகிழ்விக்கும் நடிகனாக இருக்கிறேன், நாளைக்கு என்னவாக இருப்பேன்' என்று எனக்கு தெரியாது அது கடவுள் கையில் இருக்கு என்றார். விழாவில் ரஜினியுடன் பிரபல திரைப்பட இயக்குநர் எஸ்.பி.முத்துராமன் மேடையில் அமர்ந்திருந்தார்.

published on : 16th May 2017
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை