• Tag results for ராம்நாத் கோவிந்த்

பத்ம விருது பெற்றார் தோனி

2018ஆம் ஆண்டுக்கான பத்ம விருதுகள்  விருதுகள் வழங்கப்பட்டது. இதில் கிரிக்கெட் வீரர் டோணிக்கு பத்ம பூஷன் அறிவிக்கப்பட்டது. ராணுவத்தில் லெஃப்டினன்ட் கலோனலாக கவுரவப் பதவி வகிக்கும் தோனி, ராணுவ சீருடையில் வந்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்திடம் பத்ம பூஷண் விருது பெற்றார். விழாவில் துணை குடியரசுத் தலைவர்  வெங்கையா நாயுடு, பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

published on : 4th April 2018

ஜெர்மன் அதிபர் இந்தியா வருகை

5 நாள் அரசு முறை பயணமாக இந்தியா வந்தடைந்த ஜெர்மன் அதிபர் ஃப்ராங்க் வால்டருக்கும் அவரது மனைவிக்கும் குடியரசுத் தலைவர் மாளிகையில் சிவப்பு கம்பள மரியாதை நல்கப்பட்டது. இதில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், அவரது மனைவி சவிதா கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

published on : 24th March 2018

பெல்ஜியம் மன்னர் - ராணி இந்தியா வருகை

பெல்ஜியம் நாட்டு மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே தம்பதியினர் ஏழு நாள் பயணமாக இந்தியா வந்துள்ளனர். இந்நிலையில் மன்னர் பிலிப் மற்றும் ராணி மதில்டே ஆகியோர் ராஜ் காடில் உள்ள மகாத்மா காந்தி நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர். பிறகு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் மற்றும் பிரதமர் மோடியையும் நேரில் சந்தித்து பேசுவார். அதன்பின்னர் மும்பைக்கு சென்று 2008ல் தீவிரவாதிகள் தாக்குதலுக்கு பலியானவர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்துகின்றனர்.

published on : 7th November 2017

துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்பு

நாட்டின் 13-வது துணை ஜனாதிபதியாக வெங்கய்ய நாயுடு பதவியேற்றுக் கொண்டார். அவருக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். விழாவில் பிரதமர் மோடி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீத் அன்சாரி, பா.ஜ.க. மூத்த தலைவர் அத்வானி, அமித்ஷா, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

published on : 11th August 2017

பதவியேற்பு விழா

நாட்டின் 14வது குடியரசுத் தலைவராக ராம்நாத் கோவிந்த் பதவியேற்பு விழா பாரம்பரிய முறைப்படி தில்லியில் கோலாகலமாய் நடைபெற்றது. உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஜே.எஸ்.கெஹர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். பதவியேற்றதை தொடர்ந்து பிரதமர் மோடி, முன்னாள் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, குடியரசுத் துணைத் தலைவர் ஹமீத் அன்சாரி மற்றும் அனைத்து மாநில ஆளுநர்கள், முதல்வர்கள் உள்பட பல்வேறு தரப்புகளில் இருந்து வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டன.

published on : 26th July 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை