• Tag results for Karunanidhi

அழகிரியின் அமைதி பேரணி 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதியின் மூத்த மகன் மற்றும் முன்னாள் திமுக தென்மண்டல அமைப்பு செயலாளர் மு.க. அழகிரி தனது ஆதரவாளர்களுடன் அமைதி பேரணி, சென்னை திருவல்லிக்கேணி போலீஸ் நிலையம் அருகே வாலாஜா சாலையில் இருந்து மெரினா கடற்கரையில் உள்ள கருணாநிதி நினைவிடம் சென்றடைந்தது. மெரினாவில் உள்ள கருணாநிதி நினைவிடத்தில் மு.க.அழகிரி மலர்தூவி அஞ்சலி செலுத்தினார். 

published on : 5th September 2018

கருணாநிதி நினைவேந்தல் நிகழ்ச்சி

மறைந்த திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும், தமிழக முன்னாள் முதல்வருமான மு.கருணாநிதிக்கு நடிகர் சங்கம் சார்பில் நினைவேந்தல் கூட்டம் காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இதில் நடிகர் ரஜினிகாந்த், நடிகர் சங்க தலைவர் நாசர், பொதுச்செயலாளர் விஷால், பொருளாளர் கார்த்தி உள்ளிட்ட பல நடிகர், நடிகைள், இயக்குநர்கள் மற்றும் திரைத்துறையை சேர்ந்தவர்கள் பங்கேற்று கருணாநிதி உருவப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர். 

published on : 21st August 2018

கருணாநிதி நினைவிடத்தில் அழகிரி அஞ்சலி

திமுக தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான கருணாநிதி நினைவிடத்தில்  அவரது மகனும் முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க அழகிரி, மனைவி காந்தி அழகிரி, மகன் தயாநிதி அழகிரி, மகள் மு.க.தமிழரசு ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

published on : 14th August 2018

கருணாநிதி 1924 - 2018

திராவிட இயக்கத்தின் மூத்த தலைவரும், 5 முறை தமிழக முதல்வராக இருந்தவரும், திமுக தலைவருமான கருணாநிதி, உடல்நிலையில் பின்னடைவு ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி  காலமானார். 

published on : 8th August 2018

விடை பெற்றார் கருணாநிதி 

வயது மூப்பு காரணமாக கடந்த 11 நாட்களுக்கும் மேலாக சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், கருணாநிதியின் உடல்நிலை  பின்னடைவை சந்தித்து. இதனையடுத்து முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி காலமானார். 

published on : 7th August 2018

 கருணாநிதி ஒரு சகாப்தம்

நாகப்பட்டினம் மாவட்டத்தில் திருக்குவளை என்னும் கிராமத்தில் 1924ஆம் வருடம் ஜூன் 3-ஆம் தேதி முத்துவேலருக்கும் - அஞ்சுகம் அம்மையாருக்கும் மகனாக பிறந்த தட்சிணாமூர்த்தி இன்று மாலை சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சுமார் 6.10 மணியளவில் காலமானார்.

published on : 7th August 2018

தீவிர மருத்துவக் கண்காணிப்பில் கருணாநிதி

சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் திமுக தலைவர் கருணாநிதியின் உடல்நிலை குறித்து அறிய தொண்டர்கள் அதிக அளவில் குவியத் தொடங்கினர். இந்நிலையில் அவரது உடல் நிலை ஞாயிற்றுக்கிழமையன்று சற்று பின்னடைவு ஏற்பட்டது முதல் திமுக முன்னாள் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு, திமுக எம்பிகள், எம்எல்ஏக்கள், திமுக தலைவர் கருணாநிதியின் குடும்ப உறுப்பினர்களான ராஜாத்தி அம்மாள், துர்கா ஸ்டாலின், மு.க.தமிழரசு, உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்டோர் ஒருவர் பின் ஒருவராக மருத்துவமனைக்கு வந்தனர்.

published on : 30th July 2018

கலைஞர் கருணாநிதி வைர விழா

திமுக தலைவர் கருணாநிதியின் 94ஆவது பிறந்த தினம் மற்றும் சட்டப்பேரவை பணி வைர விழாவை ஒட்டி, சென்னையில்  நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் காங்கிரஸ் துணைத் தலைவர் ராகுல் காந்தி, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோருடன்  திரிணமுல் காங்கிரஸ் கட்சியின் மாநிலங்களவை குழுத் தலைவர் டெரிக் ஓ பிரையன், தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் உமர் அப்துல்லா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி., மஜித் மேமன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயலாளர் டி.ராஜா, பிகார் முதல்வர் நிதீஷ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி, புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர் உள்ளிட்ட தலைவர்கள்.

published on : 4th June 2017
Thirumana Porutham
  • அதிகம்
    படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை