ஏர் ஏசியாவுடன் தாய்லாந்தில் மறக்க முடியாத வாரஇறுதி விடுமுறைக் கொண்டாட்டங்கள்!

தாய்லாந்து பல்லாண்டுகளாக அதன் அழகு ததும்பும் கடற்கரைகளுக்காகவும், கலைநயம் மிக்க கோயில்களுக்காகவும், பிரம்மாண்டமான அரண்மனைகளுக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்றது.
ஏர் ஏசியாவுடன் தாய்லாந்தில் மறக்க முடியாத வாரஇறுதி விடுமுறைக் கொண்டாட்டங்கள்!

வாரஇறுதி விடுமுறை நாட்கள் என்பவை கார்ப்பரேட் துறையில் பணிபுரிவோருக்கு மிகச்சிறந்த வரப்பிரசாதம். ஏனென்றால், விடுமுறை நாட்கள் முழுக்க தங்களை அச்சுறுத்தும் டெட்லைன்களிலிருந்து விடுதலை பெறலாம். நண்பர்களது பண்ணை வீடுகளுக்குப் படையெடுக்கலாம்; மாலை நேரத்தில் பீச்சுக்குப் போய் சுண்டல் சாப்பிட்டுவிட்டு கடலை ரசிக்கலாம். மதிய நேரங்களில் ஒரேவிதமாக லஞ்ச் சாப்பிடும் திட்டத்தை உடைத்துக் கடாசிவிட்டு நண்பர்களின் குடும்பங்களோடு சேர்ந்து குழுவாக புஃபேக்களில் கையில் தட்டுகளை ஏந்திக்கொண்டு பிரபல உணவகங்களைச் சுற்றி வரலாம். அதே மாலை எனில் கப், கப்பாக காஃபி அருந்துவதை ஒழித்துக் கட்டிவிட்டு ஜாலியாக பெரிய பெரிய மக்குகளில் காக்டெயில் பானங்களை அருந்தலாம். வார இறுதி விடுமுறை என்றால் இப்படி எதையெதையோ நாம் திட்டமிடலாம். எதைத் திட்டமிடுவதாக இருந்தாலும் அதன் ஒரே குறிக்கோள் என்றும், எப்போதும் மாறாதது. அது என்னெவெனில் மொத்தக் குடும்பமும் குதூகலிப்பது ஒன்றே முக்கியக் குறிக்கோள். ஆனால், குடும்பத்துடன் குதூகலிக்க இவை மட்டும்தானா வாய்ப்புகள்?! இன்னும் நிறைய சாய்ஸ்கள் இருந்தால் அவற்றை மிஸ் பண்ணுவானேன்?!

இதோ உங்களுக்காகவே ஏர் ஏசியா திட்டமிடுகிறது. சற்று வித்தியாசமாக வாரஇறுதி விடுமுறை நாள் கொண்டாட்டங்களுக்காக தாய்லாந்துக்குப் போய் வந்தால் என்ன?

அட, வாரஇறுதி விடுமுறைகளுக்கெல்லாம் தாய்லாந்துக்குப் போய்வர முடியுமா? இதென்ன முட்டாள்தனமான திட்டமாக இருக்கிறதே என்று யோசிக்கத் தேவையில்லை. ஏனெனில் நீங்கள் உங்களது பயணத்தை திட்டமிடவிருப்பது ஏர் ஏசியாவுடன் என்பதால், தயங்காமல் பெட்டி கட்டிக்கொண்டு கிளம்பலாம். வாரஇறுதி விடுமுறைக்கு சிக்கனமாக ஒரு உலகச் சுற்றுலா என்றால், அது கனவில்லை; நிஜம்தான் நம்புங்கள். ஏப்ரல் 23 வரை இப்படி ஒரு வாய்ப்பை உங்களுக்கு வழங்குகிறது ஏர் ஏசியா. நபர் ஒருவருக்கு டிக்கெட் 4499 ரூபாய்கள் மட்டுமே. சீக்கிரம் முடிவெடுங்கள், வெயில் நீண்ட கோடைகால வாரஇறுதி விடுமுறை நாட்களை நிழலடர்ந்த காடுகளில் கொண்டாடி மகிழும் உங்களது கனவுகள் அனைத்தும் ஏர் ஏசியாவால் நனவாகட்டும்.

தாய்லாந்து பல்லாண்டுகளாக அதன் அழகு ததும்பும் கடற்கரைகளுக்காகவும், கலைநயம் மிக்க கோயில்களுக்காகவும், பிரம்மாண்டமான அரண்மனைகளுக்காகவும் மிகவும் பிரசித்தி பெற்றது. அயல்நாட்டுச் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் விதமாக எப்போதுமே பாரம்பரியத்தையும் விட்டுக்கொடுக்காத நவீனத்தையும் மறுக்காத அருமையான சுற்றுலாத் தலமாக திகழ்கிறது தாய்லாந்து. தாய்லாந்துக்கு என எத்தனையோ சிறப்புகள் உண்டு, ஆனாலும், இந்த அவசர உலகில் சுற்றுலாப் பயணிகளை சட்டென கவரக்கூடிய விதத்தில் அமைந்த தாய்லாந்தின் மூன்று முக்கிய அம்சங்களை மட்டும் உடனே பார்ப்போமா?

உணவு

ஒரே ஒருமுறை தாய்லாந்து சுற்றுலா போய்வந்தால் போதும். அதன் உணவு வகைகளின் சுவையைப் பற்றி வாழ்நாள் முழுக்கவே சிலாகித்து சொல்லிக் கொண்டே இருக்கலாம். உலக அரங்கில் தாய்லாந்து உணவுகளுக்கென்றே ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள். தாய்லாந்து உணவு விடுதிகளில் கிடைக்கும் பெனாங் அசாம் லஸ்கா, சார் சூய், சம்பல் ஸ்டிங்ரே உள்ளிட்ட உணவு வகைகளின் சுவையை விவரிக்கவே வாழ்நாள் போதாது. இவை மட்டுமல்ல தாய் உணவு வகைகளின் பட்டியல் மேலும் மேலும் என நீண்டுகொண்டேதான் செல்லும். உலகில் வேறு எங்குமே நீங்கள் இத்தனை அருமையான உணவு வகைகளை உண்டிருக்கவே முடியாது. அத்தனை சுவை, அத்தனை வெரைட்டி, அத்தனை அருமையான தயாரிப்புகள். சொல்லப்போனால் இந்த உணவுகளை உண்பதற்காகவே இன்னொரு முறை தாய்லாந்து டூர் போனால் என்ன என்று தோன்றச் செய்யும் அளவுக்கு இருக்கும் அதன் சுவை!

ஷாப்பிங்

வாரஇறுதி விடுமுறை நாட்களில் பெரும்பாலான இந்தியர்களுக்குப் பிடித்த பெரிய பொழுதுபோக்கு என்றால் அது ஷாப்பிங். கால் கடுக்க நடந்தும், கூட்ட நெரிசலில் சிக்கி குதூகலித்தும் ஷாப்பிங் செய்வதில் விற்பன்னர்களாக ஆனவர்களுக்காகவே தாய்லாந்தின் பாங்காக், புகெட் இரு இடங்கள் இருக்கின்றன. இரண்டுமே ஷாப்பிங் மால்கள் மற்றும் மார்க்கெட்டுகளுக்குப் பெயர் போனவை. ஆடைகள் முதல் வீட்டு அலங்காரப் பொருட்கள் வரை ஷாப்பிங் செய்வதற்கு உகந்த அனைத்து விதமான அழகான வஸ்துகளுமே இங்கே கிடைக்கும். எனவே உங்களுக்கும், உங்களது குடும்பத்தினருக்கும் பிடித்த உங்களது வீட்டுக்குத் தேவையான அத்தனை பொருட்களையும் நீங்கள் இங்கே ஷாப் செய்யலாம்.

கடற்கரை

நீண்ட மணல்பரப்புடன் கூடிய பெரிய கடற்கரைப் பகுதி, அசரடிக்கும் அந்திப் பொழுதுகள், முகத்தில் மோதிக்கடக்கும் மேகப் பொதிகள் என இது தாய்லாந்தின் பெருமை சொல்லும் இன்னொரு விதமான சொர்க்கம். சுற்றுலாப் பயணிகள் தாய்லாந்தை நேசிக்க மிகப்பெரிய காரணங்களில் ஒன்று இந்தக் கடற்கரையும்தான் என்றால் அது மிகையில்லை. கொய் சமுய், கொய் சங், கொய் ஃபிஃபி இவையெல்லாம் தாய்லாந்து கடற்கரையை ஒட்டியே இருக்கும் குட்டி குட்டித் தீவுகள். இந்தத் தீவுகளும், ஸ்படிகம் போன்ற நீல நிற கடல் வெளியும் சேர்ந்து சுற்றுலாப் பயணிகளை வெகுவாக ஈர்த்து அவர்களை மீண்டும் ஒருமுறை, மீண்டும் ஒருமுறை என தாய்லாந்துக்கான விடுமுறைப் பயணங்களைத் திட்டமிடத் தூண்டிக்கொண்டே இருக்கும்.

கடுமையான வேலைப்பளுவில் இருந்து தாற்காலிகமாகத் தப்பிக்க இது ஒரு அற்புதமான வாய்ப்பு. தவறாமல் பயன்படுத்திக்கொண்டால் நல்லது.

மேலே சொன்னவை மட்டுமல்ல தாய்லாந்தின் சன்சேஷனல் சம்மர் சேல், தெய்வீக சுவையை உணரும் அனுபவத்தைத் தரக்கூடிய தெருவோர உணவகங்கள், சாகஷ உணர்வளிக்கும் வீர விளையாட்டுகள் என உங்களை மகிழ்விக்க ஏகத்துக்கும் காரணங்கள் கொட்டிக் கிடக்கும் தாய்லாந்துக்கு சென்றுவரும் எண்ணத்தை எக்காரணம் கொண்டும் தள்ளிப்போடாதீர்கள்.

மிகச் சிக்கனமாக தாய்லாந்தை சுற்றி வர வசதியளிக்கும் இந்த வாய்ப்பை தவறவிடாதீர்கள், உடனே உங்களுக்கான டிக்கெட்டை புக் செய்துகொள்ளுங்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com