தாஜ் மஹாலில் நிறம் மங்கும் பளிங்குக் கற்கள்!

தாஜ் மஹாலின் வெண்ணிற பளிங்குக் கற்கள் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான
தாஜ் மஹாலில் நிறம் மங்கும் பளிங்குக் கற்கள்!

தாஜ் மஹாலின் வெண்ணிற பளிங்குக் கற்கள் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்கள், அவற்றைச் சரிசெய்வதற்கான வழிமுறைகள் ஆகியவற்றைக் கண்டறியுமாறு அதிகாரிகளுக்கு உத்தரப் பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ் சில மாதங்களுக்கு முன் உத்தரவிட்டுள்ளார்.

தாஜ் மஹாலின் வெண்ணிற பளிங்குக் கற்கள் மீது படிந்திருக்கும் பச்சை நிற படிமங்களுக்கான காரணங்களையும், அதற்கான தீர்வுகளையும் கண்டறியுமாறு ஆக்ரா மாவட்ட ஆட்சியர், கோட்ட ஆணையர், பொதுப் பணித் துறை அதிகாரிகள், தொல்லியல் மற்றும் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆகியோருக்கு ஆகியோருக்கு முதல்வர் அகிலேஷ் யாதவ் உத்தரவிட்டுள்ளார். உலகின் புகழ்பெற்ற நினைவுச் சின்னமான தாஜ் மஹாலைப் பாதுகாப்பதிலும், அதனைப் பராமரிப்பதிலும் சமாஜவாதி அரசு இயன்ற அளவுக்கு நடவடிக்கை எடுக்கும் என்றார் அவர்.
 முன்னதாக, தாஜ் மஹாலின் மீது படிந்து வரும் பச்சை நிறப் படிமங்களால் அதன் அழகு சீர்குலைந்து வருவதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. அந்தப் பச்சை நிறப் படிமங்களுக்கு சிரினோமிட்ஸ் என்ற பூச்சியினங்களின் கழிவுகள் காரணமாக இருக்கலாம். அந்தப் பூச்சியினங்கள், அருகில் உள்ள யமுனை நதியில் பல்கிப் பெருகி, அந்த நதியையும் மாசுபடுத்தியுள்ளன.

இதனிடையே, தாஜ் மஹாலைப் பாதுகாப்பதற்கு எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து பதிலளிக்குமாறு மத்திய சுற்றுச்சூல் துறை அமைச்சகம், உத்தரப் பிரதேச அரசு, அந்த மாநில மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் உள்ளிட்ட துறைகளுக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த வாரம் நோட்டீஸ் அனுப்பியிருந்தது.

‘எச்சரிக்கையுடன் இருங்கள்': இதனிடையே, உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதையொட்டி, மாநிலத்தின் அமைதியை சில சமூக விரோத சக்திகள் சீர்குலைக்கக் கூடும்; எனவே, அவர்களிடம் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும்' என்று முதல்வர் அகிலேஷ் யாதவ் அறிவுறுத்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com