நீதிபதி கே.எம்.ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வழங்க மீண்டும் கொலீஜியம் குழு பரிந்துரை

நீதிபதி கே.எம்.ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வழங்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரை
நீதிபதி கே.எம்.ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வழங்க மீண்டும் கொலீஜியம் குழு பரிந்துரை

நீதிபதி கே.எம்.ஜோசப்புக்கு உச்ச நீதிமன்ற நீதிபதி பதவி வழங்குமாறு தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமை கொலீஜியம் குழு மீண்டும் பரிந்துரை செய்துள்ளது. 

கடந்த சில நாள்களுக்கு முன்பு உத்தரகண்ட் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி கே.எம்.ஜோசப்பை உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்குமாறு கொலீஜியம் அனுப்பிய பரிந்துரையை மத்திய அரசு நிராகரித்தது. மேலும், இத்தகைய பரிந்துரையை அனுப்புவது தொடர்பான முடிவுகளை மறுபரிசீலனை செய்யுமாறும் மத்திய அரசு கொலீஜியம் குழுவிடம் தெரிவித்தது.

உத்தரகண்டில் மத்திய அரசின் ஆலோசனையின்பேரில் அமல்படுத்தப்பட்ட குடியரசுத் தலைவர் ஆட்சியை ரத்து செய்தவர் நீதிபதி ஜோசப் என்பதால், அவரது பதவி உயர்வுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக விமர்சனங்கள் எழுந்தன. மத்திய அரசின் இந்த முடிவுக்கு கொலீஜியம் குழுவில் உள்ள நீதிபதிகளும் அதிருப்தி தெரிவித்திருந்தனர்.

உச்ச நீதிமன்ற நீதிபதி செலமேஸ்வர் வரும் ஜூன் 22-ஆம் தேதி ஓய்வு பெறவுள்ள நிலையில், தலைமை நீதிபதிக்கு ''கொலீஜியம் கூட்டத்தை மீண்டும் அவசரமாகக் கூட்டி, அதில் உச்ச நீதிமன்ற நீதிபதி பொறுப்புக்கு கே.எம்.ஜோசப்பை மீண்டும் பரிந்துரைக்க வேண்டும்; அவரது பெயரையே மீண்டும் பரிந்துரைக்க வேண்டும் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்'' என்று செலமேஸ்வர் புதன்கிழமை எழுதிய கடிதம் குறிப்பிட்டிருந்தார்.  

இந்நிலையில், இன்று வெள்ளிக்கிழமை (மே 11) தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் கொலீஜியம் கூட்டம் கூடி ஆலோசனை நடத்தியது. 

அப்போது உச்ச நீதிமன்ற நீதிபதியாக ஜோசப்பை நியமிக்க மத்திய அரசுக்கு மீண்டும் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான கொலீஜியம் பரிந்துரைக்க ஒருமனதாக முடிவு செய்துள்ளது.

கொலீஜியம் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் செலமேஸ்வர், ரஞ்சன் கோகோய், எம்.பி.லோக்குர், குரியன் ஜோசப் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com