பழவேற்காட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதி

பழவேற்காட்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.
பழவேற்காட்டில் அடிப்படை வசதிகள் இல்லாததால் சுற்றுலாப் பயணிகள் அவதி

பழவேற்காட்டில் போதுமான அடிப்படை வசதிகள் இல்லாததால், சுற்றுலாப் பயணிகள் அவதிப்படுகின்றனர்.

 இந்தியாவில் இரண்டாவது பெரிய உவர்ப்பு நீர் ஏரியான பழவேற்காடு ஏரி 15 கி.மீ. பரப்பளவு கொண்டது.

 சுற்றுலாத் தலமாக விளங்கும் பழவேற்காட்டில் 17-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த அழகிய சிற்பங்களுடன் கூடிய டச்சு கல்லறைகள், நிழல் கடிகாரம் அமைந்துள்ள மசூதி, 500 ஆண்டுகள் பழைமை வாய்ந்த புனித மகிமை மாதா ஆலயம், லைட் ஹவுஸ் குப்பத்தில் கலங்கரை விளக்கம், பறவைகள் சரணாலயம், கடலும், ஏரியும் இணையும் முகத் துவாரப் பகுதி உள்ளிட்டவை அமைந்துள்ளன.

 எனினும், இப்பகுதியில் சுகாதாரமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் போதுமான அளவில் இல்லை.

 இதனால், பறவைகள் சரணாலயம் உள்ளிட்ட பல்வேறு இடங்களை பார்க்க வரும் சுற்றுலாப் பயணிகள் கடும் அவதிக்கு ஆளாகின்றனர்.

 எனவே, பழவேற்காட்டில் தரமான உணவகங்கள், தங்கும் விடுதிகள், கழிப்பறைகள், தகவல் தொடர்பு மையம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com