யோகா பயிற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள்.
யோகா பயிற்சியில் ஈடுபட்ட பிரான்ஸ் நாட்டு சுற்றுலாப் பயணிகள்.

மாமல்லபுரம் கடற்கரையில் வெளிநாட்டினர் யோகா பயிற்சி

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டினர் கடற்கரை பகுதியில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்

மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வந்துள்ள வெளிநாட்டினர் கடற்கரை பகுதியில் யோகா பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
சர்வதேச சுற்றுலாத்தலமாக விளங்கும் மாமல்லபுரத்துக்கு பல்வேறு நாடுகளில் இருந்து வரும் சுற்றுலாப் பயணிகள் அங்குள்ள பல்லவர் காலத்து புராதன சிற்பங்களைக் கண்டு ரசிப்பதுடன், புகைப்படங்களும் எடுத்துச் செல்கின்றனர்.
மேலும், அவர்கள் காலை நேரங்களில் கடற்கரைப் பகுதிகளில் யோகா பயிற்சியிலும் ஈடுபடுகின்றனர்.
குறிப்பாக, பிரான்ஸ் நாட்டிலிருந்து ஆண்டுதோறும் வரும் சுற்றுலாப் பயணிகள், இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டுகின்றனர். விடுதிகளில் தங்கும் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த யோகா பயிற்சியாளர் டொமினிக் குழுவினர் பயிற்சி அளித்து வருகின்றனர்.
இதுகுறித்து யோகா பயிற்சியாளர் ரிச்சர்ட் கூறியதாவது:
மாமல்லபுரத்துக்கு சுற்றுலா வரும் பிரான்ஸ் நாட்டினர் இந்திய கலாசாரத்தை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்கு யோகா பயிற்சிகள் அளிக்கப்படுகிறது.
தினமும் காலை வெயிலில் கடற்கரைப் பகுதியில் யோகா பயிற்சி செய்யும் போது, உடலுக்கும், மனதுக்கும் ஆரோக்கியம் கிடைக்கிறது. இங்கு கற்றுக் கொள்ளும் பயிற்சிகளை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கின்றனர்.
மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஆன்மிக தலங்களுக்கும் சென்று அவற்றின் சிறப்புகளை அறிந்து கொள்கின்றனர் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com