சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை தொழில் பொருள்காட்சி: ஜனவரி 23 முதல் அனுமதி?

சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 43-ஆவது சுற்றுலா தொழில் பொருள்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
சென்னை தீவுத்திடலில் விரைவில் தொடங்கவுள்ள 43-ஆவது சுற்றுலா தொழில் பொருள்காட்சியின் முகப்பு;
சென்னை தீவுத்திடலில் விரைவில் தொடங்கவுள்ள 43-ஆவது சுற்றுலா தொழில் பொருள்காட்சியின் முகப்பு;

சென்னை தீவுத்திடலில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய 43-ஆவது சுற்றுலா தொழில் பொருள்காட்சி அரங்குகள் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால் ஜனவரி 23 முதல் பொதுமக்கள் பார்வைக்கு பொருள்காட்சிக்கு அனுமதி அளிக்கப்படுமா என சந்தேகம் எழுந்துள்ளது.
தாமதம்: சுற்றுலாத் துறை சார்பில் பொருள் காட்சி ஆண்டுதோறும் டிசம்பர் இறுதி வாரம் தொடங்கி, தொடர்ந்து 70 நாள்கள் நடைபெறுவது வழக்கமாகும். ஆனால், கடந்த மாதம் ஏற்பட்ட முதல்வர் ஜெயலலிதா மறைவு, வர்தா புயல் போன்ற காரணங்களால் பொருள்காட்சி தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. தற்போது, கடந்த 25 நாள்களாக அரங்குகள் அமைக்கும் பணி இறுதி செய்யப்படவுள்ளது.
நாள்தோறும் கலைநிகழ்ச்சிகள்: இந்தப் பொருள்காட்சியில் வழக்கம் போல் குழந்தைகள் முதல் பெரியவர்களைக் கவரும் வகையில் பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இடம்பெற உள்ளன. அதிலும், தமிழக மற்றும் மத்திய அரசின் ஒவ்வொரு துறையின் சார்பிலும் செயல்படுத்தப்படும் நலத்திட்ட விவரங்களை அறிந்து கொள்ள முடியும். இங்குள்ள கலையரங்கில் நாள்தோறும் மாலையில் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குழந்தைகள் விரும்பும்..: குழந்தைகளைக் கவரும் வகையில் புதிய தொழில் நுட்பத்துடன் கூடிய பொழுதுபோக்கு அரங்குகள், சறுக்கு விளையாட்டுகள், யானை, கப்பல், தேர் உள்பட பல்வேறு வகையான ராட்டினங்கள், ரப்பர் படகு சவாரி, விடியோ கேம், அனிமேஷன் 3டி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், இந்தாண்டு சர்க்கஸ் நிகழ்ச்சியுடன், கூடுதலாக சாகச காட்சிகளும் இடம்பெற உள்ளன. அதனால் இந்தப் பொருள்காட்சி பொதுமக்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கட்டணம் உயர்வு: ஒவ்வொரு நாளும் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், ஞாயிறு மற்றும் அரசு விடுமுறை நாள்களில் காலை 11 மணி முதல் இரவு 10 மணி வரையிலும் பொருள்காட்சி செயல்படும். இதற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவர்களுக்கு ரூ.25, சிறியவர்களுக்கு ரூ.15, பள்ளி கல்லூரி சார்பில் வருவோருக்கு ரூ.10 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.


அரங்குகளை அமைக்கும் இறுதிக் கட்ட பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com