பொருள்காட்சியில் பார்வையாளர்களைக் கவரும் நிழல் விலங்கினங்கள்!

சென்னையில் நடைபெற்று வரும் 43-ஆவது சுற்றுலா தொழில் பொருள்காட்சியில் வனப் பகுதிக்குள் விலங்குகள் நடமாடுவது போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த உயிரியல் பூங்கா மாதிரி
சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் அசல் விலங்கினங்கள்போல் காட்சி அளிக்கும் சிறுத்தை
சென்னை தீவுத் திடலில் நடைபெற்று வரும் பொருள்காட்சியில் அசல் விலங்கினங்கள்போல் காட்சி அளிக்கும் சிறுத்தை

சென்னையில் நடைபெற்று வரும் 43-ஆவது சுற்றுலா தொழில் பொருள்காட்சியில் வனப் பகுதிக்குள் விலங்குகள் நடமாடுவது போன்று தத்ரூபமாக அமைக்கப்பட்டிருந்த உயிரியல் பூங்கா மாதிரி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்து வருகிறது.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலா தொழில் பொருள்காட்சி நடைபெற்று வருகிறது. ஏராளமான மக்கள் இந்த பொருள்காட்சியைப் பார்த்து ரசித்து வருகின்றன.
உயிரியல் பூங்கா மாதிரி: வனத்துறை சார்பில் மலைப்பகுதியில் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் வகையில் பசுமையாக்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களும் இடம்பெற்றுள்ளன. அதைத் தொடர்ந்து வனப் பகுதிக்குள் விலங்குகளான புலி, குட்டியுடன் யானை, காட்டு எருமை, சிங்கவால் குரங்குகள், மந்தி, சுனைப்பகுதியில் முதலை உள்பட பல்வேறு விலங்கினங்கள், பறவைகள் ஆகியவை நடமாடுவது போன்று தத்ரூபமாக உயிரியல் பூங்கா மாதிரி அமைக்கப்பட்டுள்ளது.
குழந்தைகள் குதூகலம்: பெரியோர் முதல் சிறியவர்கள் வரை இந்த உயிரியல் பூங்கா மாதிரியை ஆர்வத்துடன் பார்வையிடுகின்றனர். அதிலும், வனப்பகுதியில் இருப்பதுபோல் விலங்குகள் இடம்பெற்றுள்ளதால் குழந்தைகள் பார்த்ததும் பரவசப்படுகின்றனர். மேலும் மலைப்பகுதியில் விளைவிக்கப்படும் ஏலம், லவங்கம், கிராம்பு, தேன் பொருள்கள், குங்குலியம், கொல்லி மலை தேயிலை உள்பட பல்வேறு வகையான தேயிலைகளும் விற்பனைக்கு இடம்பெற்றுள்ளன.
இது குறித்து பொருள்காட்சி அரங்கில் இருந்த வனத்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: இதற்கு முன்பு வரை விலங்குகளை அட்டையில் தயார் செய்து தனித்தனியாக இடம்பெறச் செய்திருந்தோம். தற்போது, அடர்ந்த வனப்பகுதியில் மரங்கள், மூங்கில்களுக்கு இடையே விலங்குகள் தத்ரூபமாக இருப்பது போன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இது பொதுமக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com