சுற்றுலா பொருள்காட்சி: பார்வையாளர்களைக் கவர்ந்த நிழல் கிராமம்

சுற்றுலா தொழில் பொருள்காட்சியில் நிஜம்போல் இடம் பெற்றுள்ள நிழல் கிராமம் பார்வையாளர்கள், மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை அரங்கில் இடம்பெற்றுள்ள 'நிழல் கிராமம்'.
சென்னை தீவுத்திடலில் சுற்றுலாத் துறை அரங்கில் இடம்பெற்றுள்ள 'நிழல் கிராமம்'.

சுற்றுலா தொழில் பொருள்காட்சியில் நிஜம்போல் இடம் பெற்றுள்ள நிழல் கிராமம் பார்வையாளர்கள், மாணவர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது.
சென்னை தீவுத்திடலில் 43 -ஆவது தொழில் பொருள்காட்சியில் பெரியோர், சிறுவர்களை கவரும் கடல்வாழ் மீன்கள், புலி, சிங்கம் உள்ளிட்ட மிருகங்கள் ஆகியவை தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளன.
செயற்கை படகு குளம், ராட்டினம், வீட்டு உபயோகப் பொருள்கள் கண்காட்சி உள்பட பல்வேறு பொழுதுபோக்கு அம்சங்களும் இங்கு இடம்பெற்றுள்ளன. இதனால், நாள்தோறும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான பொதுமக்கள் பொருள்காட்சியை ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
நிழல் கிராமம்: குறிப்பாக, தமிழகத்தில் உள்ள சுற்றுலாத் தலங்கள் குறித்த புகைப்படங்களும், தமிழ் கலாசாரத்தை பறைசாற்றும் புகைப்படங்களும் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகின்றன.
இதில், நீலகிரி மலை ரயில் குகைப்பாலத்தில் செல்வது போன்று தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டிருந்தது. இதேபோல், ஒரு கிராமத்தை அப்படியே கண் முன்னே நிறுத்தும் வகையில், நிழல் மாதிரி கிராமத்தை வடிவமைத்துள்ளனர். அதில் கிராம கோயில் வழிபாடு, ஜல்லிக்கட்டு விளையாடும் இளைஞர்கள், பார்வையாளர்கள் வரிசை, குடிசை வீடுகள், ஆடு, மாடு, கோழிகள், உழவர்கள் மாட்டு வண்டியில் செல்வது, விவசாயப் பணி செய்யும் ஆண்கள், பெண்கள் என மிகவும் தத்ரூபமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தமிழகத்தின் கலை, பண்பாடு, கலாசாரத்தையும், தமிழர்களின் வாழ்வியல் நடைமுறைகளையும் பறைசாற்றும் வகையில் அமைத்துள்ளதால் பார்வையாளர்கள், மாணவர்களை வெகுவாக கவர்ந்துள்ளன.
இதுகுறித்து சுற்றுலாத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
கடந்தாண்டு முக்கிய மலை சுற்றுலாத் தலங்களை அட்டை வடிவமைப்பில் இடம்பெறச் செய்திருந்தோம். இந்த ஆண்டு, நிழல் மாதிரி கிராமத்தை வடிவமைத்து இடம் பெறச் செய்துள்ளோம். இதற்கு பொதுமக்கள், மாணவர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இது, இனிவரும் காலங்களில் நாங்கள் மேலும் சிறப்பாகச் செயல்பட ஊக்கமளிப்பதாக அமைந்துள்ளது என்று அவர் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com