பிட்ஸ்...

உத்தரப்பிரதேசம்,  ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்ஜாமீன் வாங்க முடியாது.  1975-ஆம்  ஆண்டு  அவசர நிலை காலத்தில்  உத்தரப்பிரதேசத்தில் முன்ஜாமீன்


உத்தரப்பிரதேசம்,  ஜார்க்கண்ட் மாநிலங்களில் முன்ஜாமீன் வாங்க முடியாது.  1975-ஆம்  ஆண்டு  அவசர நிலை காலத்தில்  உத்தரப்பிரதேசத்தில் முன்ஜாமீன் வழங்கும் விதிகள் எடுக்கப்பட்டன.  அதில் இருந்து உத்தரகாண்ட்  பிரிந்தபோது அங்கும்  அப்படியே தொடர்கிறது.

சிம்லாவிலுள்ள திறந்தவெளிச் சிறையில் கைதிகள் வெளியே சென்று தொழில் நடத்திவிட்டு  இரவு சிறைக்குத் திரும்பலாம்.  அதுமட்டுமல்ல; இந்தச் சிறையில்  செய்யப்படும் உணவு மிக நன்றாக இருப்பதால் அதை வாங்குவதற்காக மக்கள் கூட்டம் முண்டியடிக்குமாம்.

"பெற்றால்தான் பிள்ளையா?' இது படத்தின் பெயரல்ல.  ஒய்.ஜி.பி  குழுவினர் நடத்திய நாடகத்தின் பெயர்.  இதுதான் பிறகு  "பார் மகளே பார்'  என்னும் திரைப்படமாக ஆனது.

"குலேபகாவலி'  படத்தில் வரும்  "மயக்கும் மாலைப் பொழுதே நீ போ போ'  என்னும் பாடல்  "கூண்டுக்கிளி'  படத்திற்காக எழுதப் பட்டது.  ஆனால், அப்படத்தில் இடம் பெறாமல்  பிறகு  "குலேபகாவலி'யில் இடம் பெற்றது.

இந்தியாவின் முதல் "கண் வங்கி'  சென்னை எழும்பூர் கண் மருத்துவமனையில்தான் தொடங்கப்பட்டது. முதல் கண் மாற்று அறுவைச் சிகிச்சையும் இங்குதான் செய்யப்பட்டது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com