360 டிகிரி சொல்லும் செய்தி

கொக்கு தன் ஜோடியை இழந்துவிட்டால், அது ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, வேறொரு இணையைத் தேடுவதில்லையாம்.
360 டிகிரி சொல்லும் செய்தி

கொக்கு தன் ஜோடியை இழந்துவிட்டால், அது ஆணாயினும் சரி, பெண்ணாயினும் சரி, வேறொரு இணையைத் தேடுவதில்லையாம்.
-கா.அஞ்சம்மாள்

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட ஒரு பப்பாளி ரகத்தின் பெயர் "தேன்துளி' (ஏர்ய்ங்ஹ் ஈங்ஜ்). இந்த ரகத்தின் சுவை தேனாக இனிப்பதால் "தேன்துளி' என்று பெயர் சூட்டி உள்ளார்கள், பழ ஆராய்ச்சி விஞ்ஞானிகள்.
-உ.இராமநாதன்

இன்று தொடர்கதையின் முடிவில் "முற்றிற்று', "முற்றும்' என்று எழுதுகிறோம் அல்லவா? இதனை முதன்முதலில் எழுதிக் காட்டியவர் இளங்கோவடிகள்.

1895-இல் தமிழில் முதல் வரலாற்று நாவலான "மோகனாங்கி' வெளிவந்தது. இது நாயக்க மன்னர்களின் வரலாறு தொடர்பானது. 1919-இல் இதே நாவல் சுருக்கப்பட்டு "சொக்கநாத நாயக்கர்' என்ற பெயரில் வெளியிடப்பட்டது.
-முக்கிமலை நஞ்சன்

இந்தியா முழுவதும் நில அளவை செய்து வரைபடங்கள் உருவாக்குவதற்கான சர்வே பரங்கிமலையிலிருந்து தான் ஆரம்பிக்கப்பட்டது. 1802}இல் வில்லியம் லாம்ப்டனும், ஜார்ஜ் எவரெஸ்டும் இங்கிருந்து தான் சர்வேயைத் தொடங்கினார்கள். இந்த சர்வேயில் தான் இமயமலையின் உயரம் கண்டுபிடிக்கப்பட்டது. இதைக் கண்டுபிடித்த எவரெஸ்டின் பெயர்தான் உயரமான சிகரத்துக்குச் சூட்டப்பட்டது.
-பே.சண்முகம்

வண்ணாரப்பேட்டை பெயர்க் காரணம்
ஆர்.கே. நகர் தொகுதியின் முக்கியப் பகுதியாகவும், வடசென்னையின் இதயப் பகுதியாகவும் பழைய வண்ணாரப்பேட்டை உள்ளது. தி.நகர், புரசைவாக்கம் பகுதிகளின் வளர்ச்சிக்கு முன்னர் இதுவே துணி வியாபார தலமாக இருந்தது. ஆங்கில வாணிப கழகத்தின் துணிகளை துவைத்து காயப் போடுவதற்காக பல தொழிலாளர்கள் பெத்தநாயக்கன்பேட்டையின் வடபுறத்தில் பணியாற்றி வந்தனர். அவளுக்கு திறந்தவெளியும், நீரும் கிடைக்காததால் இப்போதுள்ள ஜார்ஜ் டவுன் பகுதியில் குடியேற வேண்டியதாயிற்று. அங்கேயே வாழத் தொடங்கினர். அந்தப் பகுதியே வண்ணாரப்பேட்டையாயிற்று.
-ஜோ.ஜெயக்குமார்

காலம் கடந்து ஒலிப்பவர்!
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் பாடல்களை வெறுமென தாளில் எழுதி வெற்றிப் பெறவில்லை. படத்தின் கதையை, எந்தக் காட்சியில் பாட்டு வேண்டும் என்பதையும் கருத்தில் கொண்டு உள்வாங்கி எதுகை, மோனையை மட்டும் கவனத்தில் கொண்டு தனது கற்பனையில் "இட்டுக்கட்டிப் பாடுதல்' என்னும் பழைய வழியைப் பின்பற்றி பாடல்களைப் புனைந்து, வாயாலே பாடி சாதனை புரிந்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதனால் தான் அவரது பாடல்கள் காலங்கடந்து இன்றும் ஒலிக்கின்றன.
-ஆர்.கே.லிங்கேசன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com