பட்டுப் போகவில்லை மனித நேயம்: ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞர்

வயதான, நடக்க முடியாதவர்களைக் கண்டறிந்து சிகை அலங்காரம் செய்து ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்தும்,  அநாதை சடலங்களை மீட்டு காவல்
பட்டுப் போகவில்லை மனித நேயம்: ஆதரவற்றோருக்கு உதவும் இளைஞர்

வயதான, நடக்க முடியாதவர்களைக் கண்டறிந்து சிகை அலங்காரம் செய்து ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்த்தும்,  அநாதை சடலங்களை மீட்டு காவல் துறை அனுமதியுடன் நல்லடக்கம் செய்வதை தனது தலையாயப் பணியாக செய்து,  அதற்காகவே  தனது வாழ்க்கையை அர்ப்பணித்துள்ளார், 
வேலூரைச் சேர்ந்த ஜெய்சங்கர்.

வேலூர் சேண்பாக்கம் பாப்பா ராஜகோபால் தெருவைச் சேர்ந்த குப்புசாமி, சரஸ்வதி தம்பதியின் 5}ஆவது மகனான ஜெய்சங்கர்(38), எதிர்பார்ப்பு ஏதுமின்றி இந்தப் பணியை சத்தமில்லாமல் செய்து வருகிறார். 

தந்தையை இழந்த நிலையில், இவரது தாயார் வயது முதிர்வு காரணமாக சகோதரர் வீட்டில் வசித்து வருகிறார். குடும்பம், குழந்தைகள் என்றாகி விட்டால் சேவை மனப்பான்மைக்கு இடையூறு ஏற்பட்டு விடும்  என்பதால் பெற்றோர்,  சகோதரர்கள், உறவினர்கள் எவ்வளவோ வற்புறுத்தியும் ஜெய்சங்கர் திருமணம் செய்ய மறுத்து விட்டார்.

செய்வது கூலி வேலை தான், ஆனாலும் மனது பெரிது.  வேலூர் மாநகராட்சிப் பகுதியில் ஆதரவின்றி விடப்பட்டவர்கள், நடக்க முடியாத முதியோர்கள், மனநலம் பாதித்தவர்களைத் தேடிச் சென்று அவர்களுக்கு சிகையலங்காரம் செய்கிறார். தொடர்ந்து அவர்களை ஆதரவற்றோர் இல்லங்களில் சேர்க்கிறார். 

எந்தவொரு பகுதியில் இருந்து இதுபோன்று அழைப்பு வந்தாலும் அங்கு சென்று தனது சேவையை செவ்வனே செய்து வருகிறார்.

15 ஆண்டுகளாக இவ்வாறு செய்து வருவதை பாராட்டி, பல்வேறு சமூகநல அமைப்புகள் ஜெய்சங்கருக்கு விருதுகள் வழங்கி கெளரவித்திருக்கின்றன. 
இதுகுறித்து  ஜெய்சங்கர் கூறியதாவது:

5 சகோதரர்களுடன் பிறந்த என்னால், பிறர் படும் துன்பத்தைக் கண்டும் காணாமல் செல்ல மனம் ஒத்துக்கொள்ளவில்லை. 

எந்தவித சேவையாக இருந்தாலும் காவல் துறை அதிகாரிகளிடம் தெரிவித்து அவர்களிடம் இருந்து ஒப்புதல் கடிதம் பெற்றே செய்து வருகிறேன். இதுவரை தமிழகம் முழுவதிலும் 150}க்கும் மேற்பட்டவர்களை ஆதரவற்ற முதியோர் இல்லங்களில் சேர்த்திருக்கிறேன் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com