பேல்பூரி

"பதினைஞ்சு நிமிஷம் லேட்... உன் மனசுலே என்ன நினைச்சுக்கிட்டு தினம் இப்படியே பண்ணிட்டிருக்கே?''
பேல்பூரி

கண்டது
(திருநெல்வேலி - நாகர்கோவில் பாதையில் ஒரு காபிக் கடையின் பெயர்)
ஓட்டைப்பானை காபி ஷாப் 
என்.கோமதி, பெருமாள்புரம், 
திருநெல்வேலி-7.

• (திருவாரூர் மாவட்டம் காளியாகுடியில் உணவகம் ஒன்றில்)
திருப்தியாகச் சாப்பிடுங்க...
தி(வி)ரும்பி வருவீங்க...  
எஸ்.கே.சரவணன், மயிலாடுதுறை.

• (காட்பாடியில் திருமண மண்டப வாசலில் இருந்த பேனரில்)
பள்ளிக்குப்பத்தில் பரபரப்பு!
கைது செய்யும் விழா!
குற்றம்: பெண்ணின் மனதைத் திருடியது.
தண்டனை: மூன்று முடிச்சு போடணும்.  
பி.துரை, காட்பாடி.

• (திருவாடானை பகுதியில் ஓடும் ஒரு சிறிய சரக்கு வாகனத்தின் முகப்பில் எழுதியிருந்த  பெயர்)
எஸ்.கருப்பு 
கே.அஞ்சம்மாள், திருவாடானை.

கேட்டது
• (நாகர்பாளையத்தில் ஒரு டியூஷன் சென்டரில் ஆசிரியரும் மாணவரும்)
"பதினைஞ்சு நிமிஷம் லேட்... உன் மனசுலே என்ன நினைச்சுக்கிட்டு தினம் இப்படியே பண்ணிட்டிருக்கே?''
"சார்... சாரி... இன்னிக்கு நான் லேட்டா வந்ததுக்கு காரணம் கதிரேசன்தான் சார்''
"நீ தப்பு பண்ணிட்டு அவன் மேல ஏன்டா பழியைப் போடுற?''
"இன்னிக்கு உங்களுக்கு ஸ்கூல்ல ஸ்டாப் மீட்டிங் இருக்கு. அதனால நீங்க லேட்டா வருவீங்கன்னு அவன்தான் சார் சொன்னான். அதனால நானும் லேட்டா வந்தேன்''
க.சங்கர், கோபிசெட்டிபாளையம்.
(கோயில் வாசலில் இரு நண்பர்கள்)

• "ஒருநாள் என் மனைவிக்கு முடியலைன்னு, காலைல காப்பி போட்டுக் கொடுத்தேன். அதோட மாமியாருக்கும் கொடுத்தேன். நல்லாயிருக்குன்னு ரெண்டு பேரும் சொன்னாங்க''
"சரி... இப்போ அதுக்கென்ன?''
"அதில இருந்து வீட்டுக்கு வர்றவங்க போறவங்கன்னு, எல்லார்கிட்டயும் என் மருமகன் காப்பி போட்டா எப்படியிருக்கும் தெரியுமா? குடிச்சுப் பாருங்கன்னு சொல்லி என்னைக் காப்பி போடச் சொல்லி பாடாய்ப்படுத்துறாங்கடா''
மு.உமா மகேஸ்வரி, செங்கோட்டை.

எஸ்எம்எஸ்
உன்னை மதிப்பவரிடம் தாழ்ந்து பேசு...
உன்னை மிதிப்பவரிடம் வாழ்ந்து பேசு.
மு.யூ.முகமமது ஜிபிலி, சுவாமியார் மடம்.

அப்படீங்களா!
உலகம் முழுவதும் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகமாகிக் கொண்டே போகிறார்கள். அதற்கான சிகிச்சைகளும் அதிகமாகிக் கொண்டே போகின்றன. தென்கொரியாவைச் சேர்ந்த "இன்ஸ்டிடியூட் ஆஃப் பேஸிக் சயின்ஸ்' கையில் கட்டக் கூடிய ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளது.
நமது உடலில் வரும் வியர்வையில் எவ்வளவு குளூகோஸ் கலந்திருக்கிறது என்பதை இந்தக் கருவி கண்டுபிடித்துவிடும் இந்தக் கருவி. அதைக் கண்டுபிடித்து, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள செல்பேசிக்கு அந்தத் தகவலை அனுப்பிவிடும். செல்போனில் உள்ள ஆப்ஸ் உடலுக்கு எவ்வளவு மருந்து தேவை என்று கண்டறிந்து கருவிக்குத் தெரியப்படுத்தும். கருவியில் உள்ள நுண்மையான ஊசிகள் தேவையான மருந்தை உடலுக்குள் செலுத்திவிடும். 
இந்தக் கருவியை அணிந்து கொண்டால் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், அதைப் பற்றி கவலைப்பட்டு டென்ஷனாகி தங்களுடைய சர்க்கரை வியாதியை அதிகப்படுத்திக் கொள்ளமாட்டார்கள்.
என்.ஜே., சென்னை-69.

யோசிக்கிறாங்கப்பா!
கண்பார்வை இல்லாதவன் குருடன் அல்ல...
கண் இருந்தும் தன் தவறைக் 
காணாதவன்தான் குருடன்.
வி.தளவாய்துரை, சத்திரப்பட்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com