பேல்பூரி

கண்ணில் கண்ணாடி அணிந்தாலும் பார்க்க முடியாத அளவுக்குக் கண்பார்வைத்  திறன் குறைந்தவர்கள்,  பார்ப்பதற்காக  இ சைட் என்று சொல்லப்படும் ஒரு கருவி வந்திருக்கிறது.  
பேல்பூரி

கண்டது
• (சங்கரன்கோவிலில் உள்ள ஒரு தெருவில் வரிசையாக அமைந்துள்ள 3 வீடுகளின் பெயர்கள்)
தந்தை இல்லம் - தாய்வீடு - தமிழ்வீடு
இ.மாடசாமி, சங்கரன்கோவில்.

• (கோவையில் ஓடும் சரக்கு வாகனம் ஒன்றின்  பின்புறத்தில்)
திட்டமிடப்படாத செயலும்
துடுப்பில்லாத படகும் ஒன்று
ஜெயந்தி தியாகராஜன், குனியமுத்தூர்.

• (ஈரோடு சூரம்பட்டி நால்ரோடு அருகே  திருமண அழைப்பிதழ் விற்கும் ஒரு  கடையின் பெயர்)
டும் டும் திருமண அழைப்பிதழ் இங்கு கிடைக்கும்.
எஸ்.கே.சின்னுசாமி, ஈரோடு.

• (கோவை  டாடாபாத் பகுதியில் ஒரு காரின் பின்புறத்தில்)
நட்பு என்பது நாடக நடிப்பு போல் அல்ல...
நாடித்துடிப்பு போல... 
மு.கல்யாணசுந்தரம்,
 மேட்டுப்பாளையம்.

கேட்டது
• (வேலூர் தனியார் அலுவலகம் ஒன்றில் சாப்பாட்டு நேரத்தின்போது நண்பர்கள் இருவர்)
"ஏன்டா லவ் மேரேஜ் செஞ்சோம்னு வெறுப்பா இருக்குடா''
"விரும்பித்தானே கட்டிக்கிட்டீங்க... இப்ப ஏன்டா சலிச்சுக்குறே?''
"அட நீ வேற... ஜியோ அன் லிமிட்டெட் ஆஃபர்  ரீ சார்ஜ் பண்ணி கொடுத்தாலும், கல்யாணத்துக்கு முன்னே மாதிரி, இப்பவும் மிஸ்டுகால் கொடுக்கிறாப்பா''
வெ.ராம்குமார், வேலூர்.

• (அரக்கோணம் - காஞ்சிபுரம் பேருந்தில் ஓயாமல் பேசிக் கொண்டே வந்த ஒரு மாணவியும் கண்டக்டரும்)
"கொஞ்சம் பேசாமத்தான் வாயேன்.  உன் பேச்சைக் கேட்டு கேட்டு என் காது ஓட்டையாயிடுச்சு''
"நாளைக்குக் கம்மல் வாங்கிட்டு வர்றேன். காதுல மாட்டிக்குங்க''
வி.கண்ணகி செயவேலன், அரக்கோணம்.

எஸ்எம்எஸ்
பார்த்தவுடன் பழகாதே
பழகியவுடன் இணையாதே
இணைந்தவுடன் பிரியாதே
பிரிந்தவுடன் வருந்தாதே
வருந்தியவுடன் தேடாதே...
தேடிக் கிடைத்தால்
மீண்டும் தொலைக்காதே.
அ.கருப்பையா, பொன்னமராவதி.

அப்படீங்களா!
கண்ணில் கண்ணாடி அணிந்தாலும் பார்க்க முடியாத அளவுக்குக் கண்பார்வைத்  திறன் குறைந்தவர்கள்,  பார்ப்பதற்காக  இ சைட் என்று சொல்லப்
படும் ஒரு கருவி வந்திருக்கிறது.  
இங்கிலாந்தைச் சேர்ந்த   கேஸி என்ற 51 வயதான ஒருவருக்கு 27 ஆண்டுகளுக்கு முன்பே பார்க்கும் திறன் குறைந்து விட்டது. அவர் இந்தக் கருவியை அணிந்து கொண்டு ஃப்ளீட்வுட் டவுன் என்ற நகரில் நடந்த கால் பந்து விளையாட்டை  கண்டு  ரசித்திருக்கிறார். 
 தலையில் அணியும் இந்தக் கருவியில் கேமரா ஒன்று இணைக்கப்பட்டிருக்கிறது. அந்த கேமராவில் இருக்கும் காட்சிகள் கண்ட்ரோலருக்கு அனுப்பப்படுகின்றன.  கண்ட்ரோலர்  கேமராவில் இருந்த காட்சிகளை பார்வைத்திறன் குறைந்தவர்கள் பார்க்கும் அளவுக்கு மாற்றி அந்தக் கருவிக்கே திரும்ப அனுப்பிவிடுகிறது.  அந்தக் காட்சிகளை இந்தக் கருவியில் உள்ள எல்இடி திரையில் பார்க்க முடியும்.  இந்தக் காட்சிகளை 14 மடங்கு பெரிதாக ஆக்கிப் பார்க்க முடியும்.  இந்தக் கருவியின் விலை சுமார் 8 லட்சத்து 30 ஆயிரம் ரூபாய். 
என்.ஜே., சென்னை-69

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com