தபால்காரர் தேந்தெடுத்த ராகம்

தயாரிப்பாளர் பாலாஜியின் "தங்கை' படத்துக்காக ஒரு பாடல் எழுதப்பட்டு அதற்கு பல ராகங்கள் போடப்பட்டன.
தபால்காரர் தேந்தெடுத்த ராகம்

தயாரிப்பாளர் பாலாஜியின் "தங்கை' படத்துக்காக ஒரு பாடல் எழுதப்பட்டு அதற்கு பல ராகங்கள் போடப்பட்டன. தயாரிப்பாளருக்கு ஒரு ராகமும் பிடிக்கவில்லை. இறுதியில் எம்.எஸ்.விஸ்வநாதன் அந்தப் பாடலுக்கு மூன்று ராகங்களைப் போட்டார். அந்த அலுவலகத்துக்கு தினமும் வரும் தபால்காரரிடம் அதைப் போட்டுக் காண்பித்து, அதில் அவர் எந்த ராகத்தைத் தேர்வு செய்கிறாரோ அந்த ராகத்தில் பாடலுக்கு இசை அமைப்பது என்பது முடிவு.
அப்படி அந்தத் தபால்காரர் தேர்ந்தெடுத்த ராகத்தில் தான் பாடல் பதிவு செய்யப்பட்டது. அதற்கு பின்னர் அந்தப் பாட்டில் ராகம் சம்பந்தமாக ஏதாவது பிரச்னை வந்தால் உடனே ""கூப்பிடு அந்த தபால்காரரை!'' என்பாராம் எம்.எஸ்.விஸ்வநாதன்.
அப்படி அந்தத் தபால்காரர் தேர்ந்தெடுத்த ராகத்தில் பாடப்பட்ட பாடல்தான்
"கேட்பவரெல்லாம் 
பாடலாம் - என்
பாட்டுக்குத் தாளம்
போடலாம்' 
என்ற பாடல்.
-மயிலை மாதவன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com