பேல்பூரி

பல் துலக்க எவ்வளவு நேரமாகும்? ஓர் ஐந்து நிமிடம்?... அப்படியும் மிக மிகச் சுத்தமாக பல் துலக்க முடியுமா என்பது சந்தேகமே.
பேல்பூரி

கண்டது
• (சுங்குவார் சத்திரம் அருகே சந்த வேலூர் என்ற ஊரில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
ஓட்டல் 1345
ஒய்.ராபர்ட், கரிவேடு கிராமம்.

• (திருவாரூர் மாவட்டத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
காகம்
கனக.கந்தசாமி, முத்துப்பேட்டை.

• (சேலம் சித்தர் கோவில் ரோட்டில் நின்று கொண்டிருந்த ஓர் ஆட்டோவின் முன்புறத்தில்)
மஞ்சள் அழகி
வெ.சென்னப்பன், தருமபுரி -3

• (அரூர் நகைக்கடை ஒன்றில்)
வார்த்தை வெள்ளி
மெளனம் தங்கம்
பத்மாவதி புருஷோத்தமன், 
வெங்களாபுரம்.

கேட்டது
• (மதுரையில் ஒரு கோயிலில் கருவறைக்கு அருகில் ஒரு போலீஸும், கைக்குழந்தையுடன் ஒரு பெண்ணும்)
பெண்: சார் கூட்டத்திலே நிற்க முடியலை... குருக்கள் கிட்டே கொஞ்சம் விபூதி வாங்கிக் கொடுங்க. நான் இப்படியே திரும்பிப் போயிடுறேன்.
(அவர் விபூதி வாங்கிக் கொடுத்ததும்)
சார்... அப்படியே குழந்தைக்குப் பூசி விடுங்களேன்.
காவலர்: பரவாயில்லையே... போலீûஸயே பூசாரியாக்கிட்டையேம்மா...
பெண்: சாரி... சார்.
ஆர்.நாகராஜன், மதுரை-1

• (தேனி - மதுரை பேருந்தில் கணவன் - மனைவி)
கணவன்: இந்தா நீயே டிக்கெட் எடு
மனைவி: ஏன் நீங்க எடுக்க மாட்டீங்களா?
கணவன்: நீதான் விவரமா எடுப்ப... விட்டா எனக்கே அரை டிக்கெட் எடுத்துருவ!
பா.சின்மயானந்தம், மதுரை -20

எஸ்எம்எஸ்
துரோகிகளிடம் 
கோபம் இருக்காது...
கோபப்படுபவர்களிடம்
நிச்சயம் துரோகம் இருக்காது.
துரை.ஏ.இரமணன், துறையூர்.

யோசிக்கிறாங்கப்பா!
ஒரு கிலோ தேனைப் பெறுவதற்காக,
தேனீக்கள் மில்லியன் பூக்களைச் சந்திக்கிறது.
அற்ப மனிதன் ஒரு கேள்விக்கே 
துவண்டு விடுகிறான்.
ஜோ.ஜெயக்குமார், 
நாட்டரசன்கோட்டை.

அப்படீங்களா
பல் துலக்க எவ்வளவு நேரமாகும்? ஓர் ஐந்து நிமிடம்?... அப்படியும் மிக மிகச் சுத்தமாக பல் துலக்க முடியுமா என்பது சந்தேகமே. புதிதாக வரவிருக்கிற ஒரு பல்துலக்கும் கருவி, வெறும் மூன்றே விநாடிகளில் உங்கள் பற்களைத் துலக்கிவிடும். "யுனிகோ மெüத்பீஸ்' என்ற பல் துலக்கும் கருவியை உங்கள் வாயில் வைத்துக் கொண்டால் போதும். அந்தக் கருவியில் உள்ள பிரஷ் வெளியே வந்து உங்கள் பற்களைத் துலக்க ஆரம்பித்துவிடும். இந்த பல் துலக்கும் கருவியில் இணைக்கப்பட்டுள்ள சின்னஞ்சிறிய பம்ப் அமைப்பு (அதில் மிகச் சிறிய மோட்டார் இணைக்கப்பட்டிருக்கும்) தேவையான அளவு டூத் பேஸ்ட்டை பிரஷ்களின் வழியே பற்களின் இடுக்களில் எல்லாம் படும்படி செய்யும். ஒரு தடவை பயன்படுத்திய பின்பு இந்தக் கருவியை ரீ சார்ஜ் செய்து கொள்ள வேண்டும்.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com