ஒரு ஜதி சரியில்லாததால்...

காலஞ்சென்ற பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வீணை வாசிக்கவும் தெரியும். நன்றாக மிருதங்கமும் வாசிப்பார்.
ஒரு ஜதி சரியில்லாததால்...

காலஞ்சென்ற பிரபல பாடகி எம்.எஸ். சுப்புலட்சுமிக்கு வீணை வாசிக்கவும் தெரியும். நன்றாக மிருதங்கமும் வாசிப்பார். ஒருமுறை டில்லியில் நடந்த அவருடைய இசை நிகழ்ச்சியில் மிருதங்க வித்வான் தனி ஆவர்த்தனம் வாசித்துக் கொண்டிருந்தார். ( பத்து நிமிடம்) அப்போது அவர் வாசித்த ஒரு ஜதி சரியில்லாததால் எம்.எஸ். தானே எழுந்து போய் திருத்தி வாசித்தார்.

நம் சமூகத்தில் விதவைகள் குங்குமம் இட்டுக் கொள்ளக் கூடாது என்ற ஒரு வழக்கம் இருக்கிறது. ஒருமுறை நான் பெண்களுடன் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது ஒரு பெண்மணி ஒவ்வொருவராக குங்குமம் வைத்துக் கொண்டு வந்தார். என் பக்கத்தில் வந்ததும் வெடுக்கென்று கையை பின்பக்கம் இழுத்துக் கொண்டுவிட்டார். " நீ ஒரு விதவை' என்று ஞாபகப்படுத்துவது போல் இருந்தது அவருடைய செய்கை'
(ஒரு பேட்டியில் நடிகை சரோஜாதேவி சொன்னது)
- அனிதா ராமசந்திரன்.

• ஆல்பட் காமஸ் என்னும் பிரெஞ்சு எழுத்தாளர் எழுதிய தொடர்கதை முடிவு பெறுமுன்பே அவர் இறந்துவிட்டபடியால் அவரது மகள் அதை தொடர்ந்து எழுதி முடித்து வைத்தார்.

• "கல்கி' அவர்கள் "கல்கி'யில் வெளிவந்த "அமரதாரா' என்னும் தொடர்கதை முடியுமுன்பே இறந்துவிட்டபடியால் அவரது மகள் ஆனந்தி அவர் எழுதி வைத்திருந்த குறிப்பை வைத்து எழுதி முடித்தார்.

• எழுத்தாளர் ஜெயகாந்தன், தான் எழுதும் சிறுகதையில் முக்கியமான பகுதியை முதலில் எழுதிவிட்டு பிறகுதான் முன்னும் பின்னும் எழுதுவார்.

• டாக்டர் மு.வரதராசனார் கோடை காலத்தில் குன்னூரில் வீடொன்றை வாடகைக்கு எடுத்து அங்கு தங்கி நாவலை எழுதி முடிப்பார்.
- வி.ந.ஸ்ரீதரன், சென்னை.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com