சிரி... சிரி... சிரி... சிரி...

"வாராவாரம் புதுசு புதுசா கண் மை டப்பா வாங்கிட்டுப் போறீங்களே, எதுக்கு சார்?''"என் மனைவி புது"மை' விரும்பிங்க!''
சிரி... சிரி... சிரி... சிரி...

• "தாய்ப்பாலும், பசும்பாலும் ஒண்ணுதான்...''
"எந்த முட்டாள் சொன்னது?''
"எங்க வீட்டு கன்றுக்குட்டிதான்!''
எம்.அசோக்ராஜா, அரவக்குறிச்சிப்பட்டி.

• "மாடு வாங்க லோன் கேட்குறீங்களே, எப்படிக் கட்டப் போறீங்க..?''
"எல்லாம் கயிறு போட்டுத்தான்!''
லக்ஷ்மி பாரதியன்,
கோபிசெட்டிபாளையம்.

• "வாராவாரம் புதுசு புதுசா கண் மை டப்பா வாங்கிட்டுப் போறீங்களே, எதுக்கு சார்?''
"என் மனைவி புது"மை' விரும்பிங்க!''
வி.ரேவதி, தஞ்சை.

• "ஏப்பா பஸ்சிலே 52 சீட் இருக்கு. 2 பேர் டிக்கெட் எடுக்கலே. யாருய்யா அது? ஒழுங்கா சொல்லிடுங்க.''
" டிரைவரும் நீயும்தான்யா அது.''
தீ.அசோகன், சென்னை.

• "ஒற்றுமையே வலிமைங்கிறதை நேற்றுதான் புரிஞ்சுகிட்டேன்''
"எப்படி?''
"எங்க வீட்டில் உள்ள எல்லா கொசுக்களும் சேர்ந்து கொசுவர்த்தி சுருளையே தூக்கிட்டு போயிடுச்சு.''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

• "நாடகத்தைவிட சினிமாதான் சக்தி வாய்ந்தது''
"எப்படிச் சொல்றே?''
"நாடகம் நடக்கும் - சினிமா ஓடும்!''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

• இவன்: மேக் அப் போட்டு விளையாடற கேம் எதுடா...?
அவன்: பவுடர் போட்டு அழகு பார்க்கற கேரம்தான்...!
ஆர்.சீதாராமன், சீர்காழி.

• "தீபாவளி பர்சேஸுக்குப் போன நீங்க இப்போதான் வர்றீங்களே, என்னாச்சு?''
"டென் தௌஸண்ட் வாலா பட்டாசு சரியா இருக்கானு எண்ணிப் பார்க்க கொஞ்சம் லேட்டாயிடுச்சு!''
லக்ஷ்மி, கோபிசெட்டிபாளையம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com