பேல்பூரி

மெத்தை வாங்கினேன். தூக்கத்தை வாங்கலை' என்று சொல்பவர்கள், இனிமேல் இந்த ரோபோ தலையணையை வாங்கினால்
பேல்பூரி

கண்டது
• (நாகப்பட்டினம் மாவட்டம் சிக்கலுக்குப் பக்கத்தில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
குற்றம் பொறுத்தானிருப்பு
மு.பெரியசாமி, விட்டுக்கட்டி.

• (கோவை போத்தனூரில் ஒரு தொழிற்சாலையில் ஆண்களும் பெண்களும் இணைந்து பணிபுரியும் பகுதியில் ஓர் அறிவிப்புப் பலகையில்)
நீ என் சகோதரி
உன்னை எப்படிக் காதலிப்பது?
எஸ்.ஆறுமுகம், கோயம்புத்தூர்-21.

• (கோபிசெட்டிபாளையத்திலுள்ள ஒரு டியூஷன் சென்டரில்)
பார்த்துப் படி
பார்த்தால் மட்டும் படிக்காதே.
க.சங்கர், நாகர்பாளையம்.

• (திருவாரூர் மாவட்டம் சன்னாநல்லூர் சிவன்கோவில் தெருவில் நடைபெற்ற புதுமனை புகுவிழா அழைப்பிதழில் காணப்பட்ட ஒரு பெயர்)
வருங்கால அரசன்
இளங்கோ, மன்னார்குடி.

கேட்டது
• (சென்னை மாநகரப் பேருந்தில் கண்டக்டரும் பயணியும்)
"கண்டக்டர் உனக்கு நல்ல மனசுப்பா... முணு
முணுக்காம மீதி சில்லறை கொடுக்கிறாயே?''
" என்ன பெரிசு... ரொம்ப ஐஸ் வைக்கிறே.... ரெண்டாயிரம் ரூபாய்க்குச் சில்லறை வேணுமா?''
நெ.இராமன், சென்னை-74.

• (புத்தகம் விற்பனை நிலையம் ஒன்றில் கடைக்காரரும் புத்தகம் வாங்க வந்த ஓர் ஆசிரியையும்)
"வாய்ப்பாடு ஒண்ணு வேணும். எவ்வளவு ரூபாய்? ''
"25 ரூபாய்''
"சொல்லிக் கொடுங்க''
"நீங்கதான் பசங்களுக்குச் சொல்லிக் கொடுக்கணும். நான் விக்க மட்டும்தான் செய்வேன்''
டி.ஜெய்சிங், கோயம்புத்தூர்.

எஸ்எம்எஸ்
எளியவர்கள் முன் வரிசையில் அமர்ந்திட
அனுமதிக்கும்
ஒரே இடம் - சினிமா தியேட்டர்
அ.நந்தகுமார், ஏரல்.

யோசிக்கிறாங்கப்பா!
மன்னிப்பைக் கேட்பதற்கும்
மன்னிப்பைக் கொடுப்பதற்கும்
நாம் கற்றுக் கொண்டால்
வாழ்க்கை மிகவும் எளிதாகிவிடும்.
ப.சரவணன்,
திருச்சி-6.

அப்படீங்களா!
"மெத்தை வாங்கினேன். தூக்கத்தை வாங்கலை' என்று சொல்பவர்கள், இனிமேல் இந்த ரோபோ தலையணையை வாங்கினால் தூக்கத்தை வாங்கி
விடலாம்.
ஆம். இந்த வேர்க்கடலை வடிவிலான ரோபோ தலையணை தூக்கமின்மை நோயால் (இன்சோம்னியா) பாதிக்கப்பட்டவர்களை நன்றாகத் தூங்க வைப்பதற்காக உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தத் தலையணையைப் பிடித்துக் கொண்டு படுத்துக் கொண்டால் தூக்கம் கண்களைச் சுழற்றும்.
இந்தத் தலையணையில் நூற்றுக்கணக்கான சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.
போதுமான காற்று வரவில்லையா? தூங்குவற்கு இடைஞ்சலாக வெளிச்சம் இருக்கிறதா? இப்படி தூக்கத்துக்கு இடையூறான எந்தப் பிரச்னையாக இருந்தாலும் இந்தத் தலையணை கண்டுபிடித்து, அதற்கு ஏற்ப தேவையான மாற்று ஏற்பாடுகளைச் செய்துவிடும். உதாரணமாக, அதிக வெளிச்சம் படுக்கை அறையில் இருந்தால் அவற்றைக் குறைத்து, மெல்லிய ஒளிதரும் விளக்கை எரிய வைக்கும்.
இந்த ரோபோ தலையணையை நெதர்லாந்தில் உள்ள Delft University of Technology மாணவர்கள் நான்கு பேர் சேர்ந்து உருவாக்கியுள்ளனர்.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com