சிரி... சிரி... 

சிரி... சிரி... 

"நான்... ரொம்ப காலமா பத்திரிகைக்கு எழுதறேன்... ஒண்ணுகூட திரும்பி வந்ததே இல்லை...''

* "நான்... ரொம்ப காலமா பத்திரிகைக்கு எழுதறேன்... ஒண்ணுகூட திரும்பி வந்ததே இல்லை...''
"அவ்வளவு நல்லா எழுதுவீங்களா...?''
"இல்ல... என் அட்ரசை எழுத மாட்டேன்..!''
எஸ்.சடையப்பன், 
காளனம்பட்டி.

* (வகுப்பாசிரியர் - பெற்றோர் உரையாடல்)
"உங்க பொண்ணுக்குப் படிச்சுப் படிச்சு சொன்னாலும் மண்டையில ஏறவே மாட்டேங்குது...!
"நீங்களே இப்பத்தான் படிக்கிறீங்களா டீச்சர்?''
ஆர்.இராஜேஸ்வரி, எரகுடி.

* "லைசென்ஸ் இல்ல... இன்சூரன்ஸ் இல்ல.. ஆர்.சி. புக் இல்ல... அப்புறம் ஏன் வண்டியை நிறுத்தாமப் போற..?''
"கையில காசும் இல்ல சார்!''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

* "ஸ்லீப்பர் பஸ்ஸை விட சாதா பஸ்தான் எனக்குப் பிடிக்கும்''
"ஏன்?''
"அதிலதான் பக்கத்து ஆசாமி தோளில் சாய்ந்து ஜாலியா தூங்கிட்டுப் போகலாம்!''
பர்வதவர்த்தினி, சென்னை.

• கேட்டது (ஒரு மாணவரும், ஆசிரியரும்)
ஆசிரியர்: ஏன்டா கணக்கு போடாம உட்காந்துக்கிட்டிருக்கே?
மாணவர்: சார் மேல 3 இருக்கு கீழே 6 இருக்கு. எப்படி சார் கழிக்கிறது? அதான் சும்மா இருக்கேன்.
ஆசிரியர்: கடன் வாங்கி கழிக்கலாம்ல?
மாணவர்: ஸாரி... சார். எப்பவுமே யார்கிட்டேயும் கடன் வாங்கக் கூடாதுன்னு எங்கப்பா சொல்லிருக்காரு.
சீ.பிரவீன், தர்மபுரி.

• "நம்ம நேரத்தை வீணடிக்கிறவங்க கைமாத்தா பணம் கேட்டா கட்டாயம் கொடுக்கணுமா? ஏன்?''
"அப்புறம் வரவே மாட்டாங்க!''
சரஸ்வதி செந்தில், பொறையார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com