சிரி... சிரி... சிரி... சிரி... 

"எதிர ஒருத்தன் ஏணி எடுத்துட்டு வந்தாம்மா... அது நல்ல சகுனம் இல்லன்னு சொல்லுவியே...?''
சிரி... சிரி... சிரி... சிரி... 

• "ஏன்டா திரும்பி வந்துட்டே?''
"எதிர ஒருத்தன் ஏணி எடுத்துட்டு வந்தாம்மா... அது நல்ல சகுனம் இல்லன்னு சொல்லுவியே...?''
"அது அந்தக் காலம். இந்தக் காலத்துல எதிர்ல ஏணி எடுத்துட்டு வந்தா வெற்றி நிச்சயம்னு - முன்னேற்றம்னு நினைச்சிக்கணும். தெரியுமா?''
மயிலை மாதவன், சென்னை.

• "எனக்கு தனிமை கிடைச்சா நான் பாட ஆரம்பிச்சிடுவேன்...!''
    "பாகவதரே... அப்படி எல்லாம் சொல்லாதீங்க...  நீங்க  பாட ஆரம்பிச்சா  தனிமை தானா கிடைச்சிடும்...! பில்டப்பை பாரு பில்டப்பை...!''
எஸ்.  வேல் அரவிந்த், திண்டுக்கல்.

• "என்னை நம்புங்க ஸôர். ஞாபகமறதிலதான் நான் டிக்கெட் எடுக்கல''
"சரி, சரி...  சென்னை வரப்போகுது. அபாரத பணத்தை எடுங்க''
"ஐயையோ நான் பெங்களூருக்கில்ல போகணும்!''
ஜோ.ஜெ., 
நாட்டரசன்கோட்டை.

• "உங்க நாடி ஒரே சீராக வாட்ச் மாதிரி ஓடுது.''
"டாக்டர், நீங்க பிடிச்சுப் பார்க்கிறதே என் வாட்சைத்தான்.''
ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

• "என்னது?  நீ பண்றது பிநாமி லவ்வா?''
"ஆமா... என் ஃப்ரண்ட் பிஸியா இருக்கா. அவளுக்குப் பதிலா நான் லவ் பண்றேன்..''

• "கடாய் எப்படி இப்படி நசுங்கிச்சு?''
"லடாய்லதான்'' 
பர்வதவர்த்தினி, பம்மல்.

• "செல்லம் சப்பாத்தி சூப்பரா செஞ்சிருக்கடி''
   "அப்படியா!''
   "நல்லாருக்குன்னுதானே சொல்றேன். அப்புறம் ஏன் முறைக்கிற?''
   "அது கோதுமை தோசை''
  ஜோ.ஜெயக்குமார்,   நாட்டரசன்கோட்டை.

• "புலவரே! என் செல்போன் நம்பரை கேட்கிறீரே, ஏன்?''
"மன்னா! அடிக்கடி என்னாலே 
அரண்மனைக்கு அலைய முடியலே! செல்போன்லே உங்களைப் புகழ்ந்து பாடிடுறேன்... பரிசுப் பணத்தை என் பேங்க் அக்கவுண்ட்ல ஏற்றி விட்டுடுங்க!''
கு.அருணாசலம்,  தென்காசி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com