தந்தைக்கு வாழ்த்து சொன்னீர்களா?

"சர்வதேச தந்தையர் தினம்' கொண்டாட காரணமானவர் யார் தெரியுமா? 1892-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அர்கன்ஸாஸில் உள்ள
தந்தைக்கு வாழ்த்து சொன்னீர்களா?

"சர்வதேச தந்தையர் தினம்' கொண்டாட காரணமானவர் யார் தெரியுமா? 1892-ஆம் ஆண்டு அமெரிக்காவில் அர்கன்ஸாஸில் உள்ள சபாஸ்டியன் நகரில் பிறந்த சோனோரா ஸ்மார்ட் டாட் என்ற பெண். தனது 16-ஆவது வயதில் தாயை இழந்துவிட்டார். தாய் இறந்தவுடன் அவரையும், அவருடன் பிறந்த ஐந்து சகோதரர்களையும் அவளது தந்தை வில்லியம் ஸ்மார்ட் வளர்த்து ஆளாக்கினார்.

1909-ஆம் ஆண்டு சோனோரா, தன் தந்தையுடன் சென்ட்ரல் மெதடிஸ்ட் சர்ச்சுக்கு சென்றிருந்தபோது, அங்கு சர்வதேச அன்னையர் தினம் அனுசரிப்பதைக் கண்டார். தன்னையும், உடன் பிறந்த சகோதரர்களையும் வளர்த்து ஆளாக்கிய தன் தந்தைக்கு நன்றி தெரிவிக்கும்வகையில், அவரது பிறந்த நாளை ஜுன் 5-ஆம் தேதியை தந்தையர் தினமாக அனுசரிக்க சோனோரா தீர்மானித்தார்.

ஆனால், நினைத்தபடி அன்றைய தினம் கொண்டாட முடியாததால் 1910-ஆம் ஆண்டு ஜுன் 19-ஆம் தேதி தன் தந்தையைக் கௌரவிக்கும் வகையில் தந்தையர் தினத்தைக் கொண்டாடினார்.

சோனோராவின் நிகழ்ச்சிக்கு நாடு முழுவதும் பரவலான வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து 1921-ஆம் ஆண்டு வெர்ஜீனியா மற்றும் 1936-ஆம் ஆண்டு நியூயார்க் ஆகிய நகரங்களில் "சர்வதேச தந்தையர் தினம்' கமிட்டிகள் உருவாயின. இதற்கிடையில் 1913-ஆம் ஆண்டு "தந்தையர் தினத்திற்கு' வரவேற்பு தெரிவித்த அமெரிக்க குடியரசுத் தலைவர் உட்ரோ வில்சன், 1916-ஆம் ஆண்டு நடந்த தந்தையர் தின விழாவிலும் கலந்து கொண்டார்.

இவரைப் போலவே 1924-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் கெல்வின் கூலிட்ஜ், இந்த தந்தையர் தினத்திற்கு ஆதரவு தெரிவித்தார். 1957-ஆம் ஆண்டு அமெரிக்க செனட்டர் மார்கரேட் சேஸ் ஸ்மித் என்பவர், "நமக்கு தாய், தந்தை இருவருமே முக்கியமானவர்கள். ஒருவரை விட்டுவிட்டு ஒருவரை மட்டுமே கௌரவிப்பது, மற்றவரை இழிவுபடுத்துவது போலாகும். இருவரையுமே கௌரவிப்பதுதான் முறை'' என்று மசோதா ஒன்றை அறிமுகப்படுத்தினார்.

இறுதியில் "ஆண்டுதோறும் ஜுன் மாதம் மூன்றாவது ஞாயிற்றுக்கிழமை இனி சர்வதேச தந்தையர் தினமாக அனுசரிக்கப்படும்' என்று 1966-ஆம் ஆண்டு குடியரசுத் தலைவர் லிண்டன் ஜான்சன் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திட்டு அறிவித்தது சரித்திரமாகும்.
-அ.குமார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com