மைக்ரோ கதை

மலையடிவாரத்தில் தொடங்கிய கண்ணாடி வளையல் வியாபாரம் டல்லடிக்கவே, கடையை முதலாளி மூட நினைத்தார். 
மைக்ரோ கதை

மலையடிவாரத்தில் தொடங்கிய கண்ணாடி வளையல் வியாபாரம் டல்லடிக்கவே, கடையை முதலாளி மூட நினைத்தார். 
அங்கே வேலை செய்யும் பணியாள், "சார்... கடையை மூட வேண்டாம். வியாபாரம் அதிகமாக நான் ஒரு யோசனை சொல்றேன்.செய்வீர்களா?'' என்று கேட்டான்.
முதலாளி அவன் சொன்ன யோசனையைக் கேட்டு, கடையில் கண்ணாடி வளையல்களுக்குப்பதிலாக ரப்பர் வளையல்களை வாங்கி விற்பனைக்கு வைத்தார். 
இரண்டு மாதங்களில் வியாபாரம் சூடு பிடித்து லாபமும் தரத் தொடங்கியது.
"எப்படி உனக்கு இந்த யோசனை வந்தது?'' என்று கேட்டார் முதலாளி.
"இந்தப் பகுதியில் கல்லுடைக்கும் வேலை செய்யும் பெண்களே அதிகம். அவர்கள் கண்ணாடி வளையல் அணிந்தால் உடைந்து போகும். அதனால் அவர்கள் கண்ணாடி வளையல்களை வாங்கவில்லை.  அதனால் ரப்பர் வளையல்களை மாற்றச் சொன்னேன்'' என்றான் பணியாள்.
என்.கோமதி, பெருமாள்புரம், நெல்லை-7.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com