குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்!

இந்த வகையில் கீழ்கண்ட  நாடுகளில் தங்கள் மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்துகின்றன.

இந்த வகையில் கீழ்கண்ட  நாடுகளில் தங்கள் மக்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வலியுறுத்துகின்றன.

டென்மார்க்:  இந்த நாட்டில் குழந்தை பெற்றுக் கொள்வது மிகவும் குறைந்து வருகிறது. இதனால் ஒரு டிராவல் நிறுவனம், பெண்கள் கர்ப்பமடைந்து, குழந்தை பெற்றுக் கொண்டால் அந்த குழந்தைக்கு, 3 ஆண்டுகளுக்கு தேவையான அனைத்தையும் இலவசமாக வழங்குவோம் என அறிவித்துள்ளது.

ரஷ்யா: இந்த நாடு ஒவ்வோர் ஆண்டும் செப்டம்பர் - 12 ஆம் தேதியை கருத்தரிக்கும் எண்ணத்தை ஊக்குவிக்கும் தினமாக அறிவித்து கொண்டாடி வருகிறது.  அன்று விடுமுறை எடுத்துக் கொண்டு, குழந்தைகள் வருகை சார்ந்து கூடுதல் கவனம் செலுத்தலாம் என குடும்பத்தினரை தூண்டி வருகிறது.

ருமேனியா: இங்கு 2010-க்கு பிறகு, பெற்றோரிடம் குழந்தைகளைப் பெற்றுக்  கொள்ளும் ஆர்வம் ரொம்ப குறைந்துவிட்டது. இதனால் கவலை கொண்ட இந்த நாட்டு அரசு, குழந்தை இல்லாத தம்பதியினருக்கு 20 சதவிகித வருமான வரியை அறிமுகப்படுத்தியது.

சிங்கப்பூர்: உலகத்தில் குழந்தை வளமை மிகக் குறைந்த நாடாக சிங்கப்பூர் உள்ளது. அங்கு ஒரு பெண்மணிக்கு 0.81 சதவிகித குழந்தைதான் உள்ளது. 
இதனால் 2012 -ஆம் ஆண்டு ஆகஸ்டு 9-ஆம் தேதியை "தேசிய இரவு' (National Night)  ஆக கொண்டாட ஆரம்பித்தது.  ஆண்டுதோறும் அரசு 1.6 பில்லியன் சிங்கப்பூர் டாலரை, திருமணமான தம்பதியினர், குழந்தைகள் பெற்றுக் கொள்ள தூண்ட செலவழித்து வருகிறது.

தென் கொரியா: ஒவ்வொரு மாதமும் மூன்றாவது புதன்கிழமை "குடும்ப தினம்' என அழைக்கப்படுகிறது  அன்றிரவு 7 மணிக்கு வீட்டு விளக்குகளை கண்டிப்பாக அணைக்க உத்தரவு உள்ளது.

இத்தாலி:  இந்த நாட்டின் குழந்தைகள் வளமை 1.43 ஆக இருப்பதால், அந்த நாட்டின் அரசாங்கமே "நேரம் கடந்து கொண்டிருக்கிறது. சீக்கிரம் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள்' என்பது போன்ற  பல விளம்பரங்களை அவ்வப்போது ஒலிபரப்பி வருகிறது.
- ராஜிராதா

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com