சிரி... சிரி... 

"எவ்வளவுதான் அடிச்சாலும் நாம திரும்ப அடிக்க முடியலேயேடா''"யாரை சொல்றே?''
சிரி... சிரி... 

• "ஆபீஸுக்கு 5 நிமிஷம் லேட்டானால் கூட, மேனேஜர் "போன் மேல போன்' போடுவாரு...''
"அவர் எத்தனை போன்தான் வெச்சிருக்கிறார்?''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

• "உன்னுடைய சம்பளத்தை என்ன செய்வாய்?''
"என் மனைவியிடம் எல்லாவற்றையும் கொடுத்து விடுவேன்.''
"உனக்கென்று ஒன்றுமே வைத்துக் கொள்ள மாட்டாயா?''
"இல்லை. அப்படி வைத்துக் கொள்ளக் கூடாது என்று சட்டம் ஒன்று சொல்கிறது''
"அது என்ன லா?''
"மதர்-இன்-லா''
ஜோ.ஜெயக்குமார், நாட்டரசன்கோட்டை.

• டாக்டர்: உங்களுக்கு ஒற்றைத் தலைவலியா இருக்கா? ரெண்டு பக்கமும் வலிக்குதா...?
இவர்: ரெண்டு பக்கமும் ஒத்த தலைவலியா இருக்கு டாக்டர்!
வி.ரேவதி, தஞ்சை.

• "எவ்வளவுதான் அடிச்சாலும் நாம திரும்ப அடிக்க முடியலேயேடா''
"யாரை சொல்றே?''
"வெயிலைத்தான் சொல்றேன்.''
தீ.அசோகன், சென்னை.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com