பேல்பூரி

11 இந்திய மொழிகளைப் பேசும்  ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ட்ஸ் ரோபாட் பெங்களூருவில்  உருவாக்கப்பட்டுள்ளது.
பேல்பூரி

கண்டது
• (துறையூரில் உள்ள ஒரு தெருவின் பெயர்)
நல்ல வாண்டு சந்து
காந்திமதி நடராஜ், 
துறையூர்-10.

• (குந்தா பகுதியில் ஒரு பைக்கில் கண்ட வாசகம்)
நின்றால் தென்றல்
புறப்பட்டால் புயல்
எல்.நஞ்சன், முக்கிமலை.

• (தஞ்சாவூர் மேல்நிலைப் பள்ளி ஒன்றின் வரவேற்புப் பலகையில்)
உன் பின்னால் பேசுபவர்களைப் பற்றி கவலைப்
படாதே...
நீ அவர்களுக்கு  முன்னால் இருக்கிறாய் என 
சந்தோஷப்படு.
சீ.மாதவன், மானம்புச்சாவடி.

• (தருமபுரி - பென்னாகரம் செல்லும் சாலையில் உள்ள ஓர் உணவகத்தின் பெயர்)
நடுப்பையன் ஹோட்டல்
கா.சீனிவாசன், மாடர அள்ளி.

கேட்டது
(திருநெல்வேலி  மாவட்டம் அறிவியல் மைய பூங்காவில் இளம் பெண்ணும், ஆணும்)
"நம்ம லவ் மேட்டர் என் தங்கச்சிக்குச் தெரிஞ்சு போச்சு''
"வீட்டுல சொல்லி பிரச்னை ஏற்படுத்திட்டாளா?''
" டெய்லி  அம்பது ரூபாய்க்கு ரீசார்ஜ் பண்ணச் சொல்லி டார்ச்சர் பண்ணிட்டு இருக்கா''
டி.செல்வன், நெல்லையப்பபுரம்.

• (சிதம்பரம் மேலவீதி மருந்துக் கடை ஒன்றில்)
வாடிக்கையாளர்:  நீங்க கொடுத்த  டூத்  பேஸ்ட்  பேஸ்ட் மாதிரியே இல்லையே...  இனிப்பு... உப்பு எதுவுமே இல்லையே? இதைப் பாருங்க.
கடைக்காரர்: நீங்க பேஸ்ட்டோட  வேறு எதுவும் வாங்கினீங்களா?
வாடிக்கையாளர்:  புண்ணுக்குப் போடுற மருந்து வாங்கினேன்...
கடைக்காரர்:  புண்ணுக்குப் போடுற மருந்தை வச்சு பல் துலக்கினா எப்படீங்க டூத் பேஸ்ட் மாதிரி இருக்கும்?
ஜெ.சசிகலா, கொள்ளிடம்.

எஸ்எம்எஸ்
சுயமாய் சிந்தித்து முடிவெடுங்கள்...
சுயநலமாய்  சிந்தித்து முடிவெடுக்காதீர்கள்.
அனன்யா, பொள்ளாச்சி.

யோசிக்கிறாங்கப்பா!
கடைசி மரமும் வெட்டப்பட்டு
கடைசி நதியும் வறண்டு
கடைசி மீனும் பிடிபட்ட பிறகுதான்...
மனிதனுக்கு உறைக்கும்போலும்...
பணத்தைச் சாப்பிட முடியாதென.
அண்ணா அன்பழகன், சென்னை-78

அப்படீங்களா!

11 இந்திய மொழிகளைப் பேசும்  ஆர்ட்டிபிசியல் இண்டலிஜென்ட்ஸ் ரோபாட் பெங்களூருவில்  உருவாக்கப்பட்டுள்ளது.  இந்த ரோபாட் ஒருவர் பேசும் மொழியைப் புரிந்து கொண்டு அந்த மொழி தெரியாத இன்னொருவருக்குத் தெரிந்த மொழியில் மொழிபெயர்க்கும் திறன் வாய்ந்தது. லிவ் ஏ.ஐ. என்ற நிறுவனம் இந்த ரோபாட்டை உருவாக்கியுள்ளது. இந்தத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, கையில் எடுத்துச் செல்லும் சிறிய ரோபாட் உருவாக்கப்பட்டால்,  மொழி தெரியாத இடத்துக்குச் செல்கிறோமே என்று யாரும் கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா?
என்.ஜே., சென்னை}69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com