மைக்ரோ கதை

அந்த கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்தார். திரளான மக்கள் பழங்களையும் பூக்களையும் வாங்கிக் கொண்டு சாமியாரைக் காண வந்தனர். 
மைக்ரோ கதை

அந்த கிராமத்துக்கு ஒரு சாமியார் வந்தார். திரளான மக்கள் பழங்களையும் பூக்களையும் வாங்கிக் கொண்டு சாமியாரைக் காண வந்தனர். 
சாமியார் தன் சீடனை அழைத்து, "பழங்களை எல்லாருக்கும் பங்கிட்டுக் கொடு'' என்றார்.
"யாருக்கு முதலில் கொடுக்கட்டும்?''  என்று கேட்டான் சீடன்.
"யாரிடத்தில் உனக்கு அதிக நம்பிக்கையும், மதிப்பும் இருக்கிறதோ அவருக்கு முதலில் கொடு'' என்றார் சாமியார்.
"சரி...''  என்று சொன்ன சீடன், முதல் பழத்தைத் தானே தின்றுவிட்டு, அதற்குப் பிறகு பிறருக்குக் கொடுக்கத் தொடங்கினான்.
மறுநாள் அந்தச் சீடனை தன்னை விட்டுச் செல்லுமாறு கூறிவிட்டார் சாமியார். 
"தன்னைப் பெரிதாக நினைக்கும் ஒருவன் துறவு வாழ்க்கைக்குப் பொருத்தமானவன் அல்ல''  என்பதே சாமியார் அதற்குக் கூறிய காரணம்.
ஆதினமிளகி, வீரசிகாமணி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com