குஜராத்தில்  தீபாவளி!

குஜராத் மாநிலத்தில் தீபாவளித் திருநாள் குஜராத்தி புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த விழாவை அவர்கள் 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள்.
குஜராத்தில்  தீபாவளி!

• குஜராத் மாநிலத்தில் தீபாவளித் திருநாள் குஜராத்தி புத்தாண்டாகக் கொண்டாடப்படுகிறது. எனவே இந்த விழாவை அவர்கள் 5 நாட்கள் கொண்டாடுகிறார்கள்.

• முதல்நாள் பண்டிகைக்கு  "தன்கோஸ்'  எனப் பெயர். அன்று கடைகளை  சுத்தம்  செய்து பூஜைக்குத் தயார்  செய்வார்கள். தங்க மற்றும் வெள்ளி நாணயங்களுடன் லட்சுமி பூஜை நடத்தப்படும்.

• இரண்டாவது நாளை  "காளிசவுதாஸ்'  எனச் சொல்வார்கள். அன்று எதுவும் சாப்பிடாமல் நோன்பிருப்பது வழக்கம். செல்வம்,  கல்வி, ஆரோக்கியம் கிடைக்க விசேஷ பூஜை செய்யப்படும்.

• மூன்றாம் நாள்  தீபாவளி பண்டிகை கொண்டாடப்படும்.  அன்று விருந்தும் விசேஷமாகவும் இருக்கும். புதுக்கணக்கு துவங்கும் வியாபாரிகள் பட்டாசு  வெடிப்பார்கள். ஆனால், தீபாவளியன்று காலையில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கும் வழக்கம் இல்லை. கணேசருக்கு பூஜை நடத்தப்படும். தொடர்ந்து லட்சுமி, சரஸ்வதிக்கு பூஜை செய்வார்கள்.

• நான்காம் நாள் புத்தாண்டுப் பிறப்பு. அன்றுதான் தான தர்மங்கள்  செய்வார்கள். நல்ல காரியங்கள் செய்வதற்கு ஏற்ற நாளாக வருடப்பிறப்பு அமைகிறது. அன்று வாடிக்கையாளர்களிடம் சிறு தொகையாவது பெறுவதை மரியாதையாகக் கருதுகிறார்கள்.

• ஐந்தாம் நாள் "பாய்பீச்'   எனப்படும்.  இந்நாளில் சகோதர சகோதரிகளின் வீடுகளுக்குச் சென்று அன்பைப் பரிமாறிக் கொள்வர். இந்நாளில் இனிப்பு சாப்பிடுவது விசேஷம். அத்துடன் சிறிது  உப்பையும் சாப்பிடுவார்கள்.
எல்.நஞ்சன், முக்கிமலை.

• காளிதேவியை வழிபடும் வங்கதேச மக்களுக்கு வியாழக்கிழமைதான் புனிதமான நாள். அன்று பணத்தைப் பெற்றுக் கொள்வார்களேயன்றி, கொடுக்கமாட்டார்கள். பூஜை நேரத்தில் சங்கு ஊதும் பழக்கம் உண்டு.  பெண்களே சங்கு ஊத வேண்டும்.
 பே.சண்முகம், செங்கோட்டை. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com