பேல்பூரி

கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஒரு 11 வயதுச் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்கள்.
பேல்பூரி

கண்டது
• (தஞ்சாவூர் அருகே அய்யம்பேட்டை - பாபநாசம் சாலையில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
நெடுந்தெரு
ந.இரகுநாதன், ரிஷியூர்.

• (சென்னை கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஒரு வங்கியின் நுழைவு வாயிலில்)
புன்னகையுங்கள்...
எங்கள் வங்கியின் 
முகமே நீங்கள்தான்.
சி.பழனிசுவாமி,  
கிழக்கு தாம்பரம், சென்னை-59.

• (நாகை மாவட்டம் சிக்கல் என்ற ஊரில் உள்ள ஒரு கடையின் பெயர்)
இறைவா A/C
கே.முத்தூஸ், தொண்டி.

கேட்டது
* (நாகர்கோவில் - சொந்தவிளை கடற்கரையில் இருவர்)
"பைனான்சியர் சுப்பையா, போன வாரம் இறந்துட்டாரே''
" ஏன்டா...  ஒரு துக்கச் செய்தியை போய் இப்படி சந்தோஷமாகச் சொல்றே?  நீ சுப்பையா கிட்ட  பணம் வாங்கியிருப்பதை   அவர் வீட்டுல சொல்லிட்டுப் போறேன், பாரு''
மகேஷ் அப்பாசாமி, 
பனங்கொட்டான் விளை.

* (திண்டுக்கல் குளத்தூரில்  நடுத்தர வயதினர் இருவர்)
"திருமணமான புதிதில் என் பேச்சை அவளும் அவ பேச்சை நானும் கேட்டுக்கிட்டு இருந்தோம்''
"குடும்பம்ன்னா அப்படித்தான் இருக்கணும்''
"ஆனால் இப்ப எங்க ரெண்டு பேர் பேச்சையும் ஊரே கேட்டுக்கிட்டு இருக்குது''
எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

எஸ்எம்எஸ்
கால்மேல் கால் போடுறது தப்பில்லே...
ஆனால்...
அத்தனை "கால்'-க்கும்

யோசிக்கிறாங்கப்பா!
நீதான் பணம் கட்டணும்கிறதை மறந்துடாதே...
வளர்மதிமுத்து, திருச்சிற்றம்பலம்.
மலையும் மலைசார்ந்த இடமும் 
குறிஞ்சி அல்ல... குவாரி.
காடும் காடு சார்ந்த இடமும் 
முல்லை அல்ல... தொழிற்சாலைகள்.
வயலும் வயல்சார்ந்த இடமும் 
மருதம் அல்ல... பிளாட்டுகள்.
கடலும் கடல்சார்ந்த இடமும் 
நெய்தல் அல்ல... அமிலக் கழிவுகள்.
குலசை நஜ்முத்தீன்,  காயல்பட்டணம்.

அப்படீங்களா!
கனடா நாட்டின் டொராண்டோ நகரில் ஒரு 11 வயதுச் சிறுவனை மருத்துவமனைக்கு அழைத்து வந்திருந்தார்கள். பையனின் பார்க்கும் திறன் மிகவும் குறைந்துவிட்டது. அவனுடைய கண்களின் ஈரப்பதம் மிகவும் குறைந்திருந்தது. இதனால் கருவிழியின் மேல் பகுதியில் படலம் போல ஒன்று படிந்திருந்தது. 
என்ன காரணம் என்று சோதித்துப் பார்த்ததில் சிறுவனுடைய ரத்தத்தில் வைட்டமின் "ஏ' - இன் அளவு மிகவும் குறைந்திருந்தது தெரிய வந்தது. ஒரு டெசி லிட்டர் ரத்தத்தில் 25.8 மைக்ரோ கிராம் வைட்டமின் ஏ இருக்க வேண்டும். பையனுக்கு இருந்ததோ வெறும் 14.3 மைக்ரோ கிராம்தான். 
உடனே மருத்துவர்கள் வைட்டமின் "ஏ' சத்தை தினம்தோறும் கொடுக்க ஆரம்பித்தார்கள்.  2 வாரங்கள் கழித்துப் பார்க்கும்போது,  உடலுக்குத் தேவையான வைட்டமின் "ஏ'  ரத்தத்தில் இருந்தது. அது மட்டுமல்ல, பார்வைத் திறனும் மேம்பட்டுவிட்டது. 
இப்போது அந்தப் பையனின் பெற்றோர், அவனுடைய உணவில் கேரட், சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கீரைகள், காய்கறிகள், மீன் போன்றவை தினமும் இருக்கும்படி பார்த்துக் கொள்கின்றனர். ஏனெனில் வைட்டமின் "ஏ' இந்த உணவுவகைகளில்தான் அதிகம் இருக்கிறதாம்.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com