சிரி... சிரி... 

"உண்மையான செயின் ஸ்மோக்கர்னா இவரைத்தான் சொல்லணும்'' "எப்படி...?''
சிரி... சிரி... 

• நோயாளி:   குளிக்கிறப்ப காதுல தண்ணி போயிடுச்சிங்க டாக்டர்! 
டாக்டர்:  கவலை வேணாம்... முழு உடம்பையும் ஸ்கேன் எடுத்துப் பாத்திடுவோம்.
சி.மாரீஸ்வரி, கீழ்கட்டளை.

• இவர்: பிளஸ் 2 ரிசல்ட் வந்ததுக்கு டாக்டர் ஏன் ரொம்ப குஷியாக இருக்காரு..?
அவர்: இந்த தடவை அவரு பாஸ் ஆயிட்டாராம்..!
எஸ். பொருநை பாலு, திருநெல்வேலி.

• "இப்ப ஏன் "போர்'ன்னு கத்தி எனக்குப் பயத்தை உண்டாக்குகிறீர்கள்?''
"இப்படிச் சொன்னதால்தான் மன்னா உங்களின் விக்கல் நின்னுடுச்சு!''
எம்.ஏ.நிவேதா, அரவக்குறிச்சிப்பட்டி.

• தோழி-1: பிரசவ லீவு கேட்டால் எங்க ஆபீசில் தரமாட்டேங்குறாங்க...
தோழி-2: ஏன்?
தோழி-1: கல்யாணம் ஆகி இருக்கணுமாமே...
எஸ். மோகன், கோவில்பட்டி.

• "உண்மையான செயின் ஸ்மோக்கர்னா இவரைத்தான் சொல்லணும்'' 
"எப்படி...?''
"கழுத்துச் செயினை அடமானம் வச்சாவது சிகரெட் வாங்கிடுவார்னா பார்த்துக்கோ!'
வி.ரேவதி, தஞ்சை.

• "அது ரொம்ப பணக்கார அல்சேஷன் நாய் போல இருக்கு''
"எப்படிச் சொல்றீங்க?''
"வாலாட்டாம காலாட்டுதே!''
டிஎன்.ரங்கநாதன், திருச்சி.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com