பேல்பூரி

புத்தகக் கண்காட்சி, கணினி கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி என  பல கண்காட்சிகள் நடைபெறுகின்றன.
பேல்பூரி

கண்டது
• (சிவகங்கை மாவட்டம் கல்லல் அருகில் உள்ள ஓர் ஊரின் பெயர்)
புலவன்பட்டி
எஸ்.ஜீவா, சிவகங்கை.

• (மதுரை - மேலூர் கடைவீதியில் உள்ள ஒரு துணிக்கடையின் பெயர்)
குண்டுக்காரர் ஜவுளிக்கடை
என்.ரகுநாதன், ரிஷியூர்.

கேட்டது
• (வேலூர் - சென்னை வழியில் காவேரிப்பாக்கத்தில் ஓர் உணவகத்தின் பெயர்)
 HOTEL KURMA
கே.பழநி, வேலூர்.

• (வேலூரில்  ஒரு  பேருந்து நிறுத்தத்தில் இரு பெண்கள்)
"நான் தினமும் தியானம் பண்ணுவேன்டி''
"தியானம் பண்ணும்போது சித்தி நிலை கிடைக்குமா... முக்தி நிலை கிடைக்குமா?''
"அதெல்லாம் எனக்குத் தெரியாது. ஆனால் நல்ல தூக்கநிலை மட்டும் கிடைக்குதடி''
 வெ.ராம்குமார்,  வேலூர் -1.

• (மதுரையில் ஒரு தனியார் பள்ளி வளாகத்தில் அம்மாவும் மகளும்)
"பாவம்மா... எங்க மிஸ்... நான் பாஸôகி 
ஃபர்ஸ்ட் ஸ்டாண்டர்ட் வந்துட்டேன். எங்க மிஸ் பெயிலாகி யூகேஜியிலேயே இருக்காங்க.''
எஸ்.தினேஷ்குமார், மதுரை.

எஸ்எம்எஸ்
கணவன் மனைவியிடம் 
மோசமாக நடந்து கொண்டால், 
நல்ல மனைவி வாடிடுவா...
மோசமான மனைவி  ஓடிடுவா.
இரா.வசந்தராசன், கல்லாவி.

யோசிக்கிறாங்கப்பா!
அன்று 
அப்பாவிற்குத் தெரியாமல்
மகனுக்கு காசு கொடுத்தார்... 
அம்மா.
இன்று,
மனைவிக்குத் தெரியாமல் அம்மாவிற்கு
காசு கொடுக்கிறான் மகன்...
       ஆர்.சிவானந்தம், கோவில்பட்டி.

அப்படீங்களா!
புத்தகக் கண்காட்சி, கணினி கண்காட்சி, வீட்டு உபயோகப் பொருள் கண்காட்சி என  பல கண்காட்சிகள் நடைபெறுகின்றன.  ஜப்பானின் டோக்கியோ நகரில்  கடந்த மாதம் ஒரு வித்தியாசமான கண்காட்சி நடந்தது. Life Ending Industry Expo என்ற சர்வதேச இறுதிச் சடங்கு தொழில் கண்காட்சியே அது.  இந்த கண்காட்சியில் இறுதிச் சடங்கு செய்ய பயன்படுத்தப்படும் சாதனங்கள், இறுதிச் சடங்கு செயல்முறைகள் பற்றிய பயிற்சிகள் எல்லாம் அறிமுகப்படுத்தப்பட்டன.
அதில் இறுதிச் சடங்கு செய்யும் ஒரு ரோபாட்டும் இடம் பெற்றது. 
ஜப்பானில் முதியோர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், வருங்காலத்தில் இந்த இறுதிச்  சடங்கு செய்யும் ரோபாட்டுக்கு ஏக கிராக்கி ஏற்படும் என்று தெரிகிறது. 
மேலும் ஜப்பானில் ஒருவரின் மரணத்துக்கு இறுதிச் சடங்கு செய்ய  20 ஆயிரம் டாலர்கள் வரை செலவாகிறதாம்.  அதில் இறுதிச் சடங்கு செய்பவருக்கு மட்டும்  1700 டாலர்கள் (ரூ. 1,08852)  தர வேண்டுமாம்.  இந்த இறுதிச் சடங்கு ரோபாட்டுக்கு  ரூ.22 ஆயிரம் கொடுத்தால் போதும். அதாவது  ஐந்தில் ஒரு பங்கு தந்தால் போதும்.  இறுதிச் சடங்கு செய்பவரைப் போல மந்திரங்கள் ஓதுதல், மலர்களைத் தூவுதல் போன்ற எல்லா வேலைகளையும் இந்த ரோபாட் செய்கிறது.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com