இருந்த இடத்திலிருந்தே!

காந்தியும் நேருவும் ஒருமுறை பாதயாத்திரை சென்றனர். வழியில் ஒரு பள்ளம் குறுக்கிட்டது நேரு அதைத் தாண்டிக் கடந்துவிட்டார்
இருந்த இடத்திலிருந்தே!

காந்தியும் நேருவும் ஒருமுறை பாதயாத்திரை சென்றனர். வழியில் ஒரு பள்ளம் குறுக்கிட்டது நேரு அதைத் தாண்டிக் கடந்துவிட்டார். காந்தி நீளமான மரப்பலகை ஒன்றைப் போட்டு அதைக் கடந்தார். அப்போது நேரு, "தாங்களும் என்னைப்போல் இப்பள்ளத்தைத் தாவிக் கடந்திருக்கலாமே?'' எனக் கேட்டார்.
 அதற்கு காந்தி, " பள்ளத்தைத் தாண்ட நீங்கள் எவ்வளவு தூரம் பின்னால் ஓடி வந்தீர்கள் என்பதைத்தான் நான் பார்த்தேனே.  நான் உங்களைப் போல் பின் வாங்க விரும்பவில்லை. இருந்த இடத்திலிருந்தே முன்னேற விரும்புகிறேன்'' என்று கூறினார்.
 ("மகாத்மா காந்தியின் வாழ்வில் சுவையான நிகழ்ச்சிகள்' என்ற நூலிலிருந்து)
 எல்.நஞ்சன், முக்கிமலை.

• இந்தி நடிகை கரிஷ்மா கபூருக்கு  "ஷெல்பி' எடுத்துக் கொள்வதில் கொள்ளை ஆசை.  உடனே அதனை சோஷியல் மீடியாவில் போட்டு கமெண்டுகளை எதிர் கொள்வதிலும் அதைவிட ஆசை. 
சிக்கல் வராமல் இருந்தால் சரி. 
 ராஜி, பெங்களூரு. 

சம காலத்தவர்!
சேரன் செங்குட்டுவன், கரிகாற் சோழன், பாண்டியன் நெடுஞ்செழியன், இலங்கை வேந்தன் கயவாகு ஆகியவர்கள் சமகாலத்தவர் என்று சிலப்பதிகாரத்திலிருந்து அறிய முடிகிறது. கயவாகு ஆண்ட காலம் கி.பி.173-195
(பிரபஞ்ச உண்மைகள்' எனும் நூலிலிருந்து).
எல். நஞ்சன், முக்கிமலை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com