பேல்பூரி 

பேல்பூரி 

பூச்சிகளைப் பிடித்துக் கொன்று செரித்துவிடும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் வீனஸ் ஃப்லைட்ராப்.

கண்டது
* (வடலூரில் ஒரு லாரியின் பின்புறத்தில்)
ஓடுறது தங்கம்
ஓட்டுறது சிங்கம்
வ.லெட்சுமிநாராயணன், வடலூர்.

* (கீழ்பென்னாத்தூர் பேருந்துநிலைய சுவரில்)
காதல் மெய்
காதலி பொய்
ஆர்.முத்துமாணிக்கம், கீழ்பென்னாத்தூர்.

* (திருநெல்வேலியில் ஆட்டோ ஒன்றில்)
வாழ நினைப்பவனுக்கு ஆயிரம் வழிகள்
சாக நினைப்பவனுக்கு முட்டுச்சந்து மட்டும்தான்.
க.சரவணகுமார், திருநெல்வேலி.

* (பெரியகுளம் புது பேருந்துநிலையம் அருகே உள்ள ஒரு சிறிய கடையில்)
இது பைசா கடை
ரூபாய்க் கடன் தாங்காது.
இரா.ரெங்கசாமி, வடுகபட்டி.

கேட்டது
• (நெய்வேலியில் காலையில் ஒரு வீட்டு வாசலில்)
"என்னங்க கண்ணு சிவந்திருக்கு''
"வாக்கிங் போகும்போது பூச்சி விழுந்திருச்சு''
"பக்கத்துல யாரையாவது கூப்பிட்டு எடுக்கச் சொல்லலாம்ல?''
"ஆமா... நான் பெரிய சிவகார்த்திகேயன். பக்கத்துல போகிற கீர்த்தி சுரேஷைக் கூப்பிட்டு எடுக்கச் சொல்றதுக்கு... போவியா''
கி.ரவிக்குமார், நெய்வேலி.

• (தொண்டி பேருந்து நிறுத்தத்தில் இரு மாணவர்கள்)
"என்னடா உங்க தாத்தா எந்த வயசானவரைப் பார்த்தாலும் இவர் என்னோட படிச்சவர்ன்னு சொல்றார்?''
"அது என்னன்னா... இந்த ஒரு கூட்டம்தான் இன்னும் எமனை ஏமாத்திக்கிட்டு சுத்திக்கிட்டு இருக்காங்க... அதான்''
ஜா.ஜெமிமா, தொண்டி.

எஸ்எம்எஸ்
இருக்குற காசிலே 
மிச்சப்படுத்துறவன் சிக்கனவாதி.
இருக்குற காசையே 
மிச்சப்படுத்துறவன் கஞ்சன்.
தீ.அசோகன், சென்னை-19.

யோசிக்கிறாங்கப்பா!
இரண்டு பேரு சண்டை போட்டுக்கிட்டா...
மூணாவதா ஒருத்தன் போய் 
விலக்கிவிடுவான்.
இப்பவெல்லாம்
மூணாவது ஆளு வீடியோ 
எடுக்குறான்.
ஜெ.சுவாமிநாதன், 
கொள்ளிடம்.

அப்படீங்களா!
பூச்சிகளைப் பிடித்துக் கொன்று செரித்துவிடும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதன் பெயர் வீனஸ் ஃப்லைட்ராப். அதன் இலைகளின் ஓரங்களில் முட்கள் இருக்கின்றன. அதன் இலைகளில் பூச்சி வந்து அமர்ந்தவுடன் இந்த இலை அப்படியே மூடிக் கொள்கிறது. தப்பிக்க முடியாமல், இலைகளுக்குள் மாட்டிக் கொண்ட பூச்சியை, இந்த தாவரத்தில் சுரக்கும் என்சைம்கள் மெல்ல மெல்ல கரைத்து உணவாக்கிக் கொள்ளும். 
இந்த வீனஸ் ஃப்லைட்ராப் போன்று பூச்சியைப் பிடித்து அழிக்கும் ரோபாட்கள் இரண்டு உருவாக்கப்பட்டுள்ளன. தென்கொரியாவின் சியோல் தேசிய பல்கலைக்கழகம் ஒரு ரோபாட்டை உருவாக்கியுள்ளது. இன்னொரு ரோபாட் அமெரிக்காவின் மைனே பல்கலைக்கழகத்தால் உருவாக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் நமது தூக்கத்தைக் கொலை செய்யும் கொசுக்களை இந்த பூச்சிக்கொல்லி ரோபோக்கள் அழித்தால் சரி.
என்.ஜே., சென்னை-69.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com