சிரி... சிரி... 

""டேய் உங்க வாத்தியார் ஒரு மாதத்துல சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்?''""டாடி... நீங்க தப்பா கேட்குறீங்க... எங்க வாத்தியார் எல்லா பாடத்தையும் சுமாராத்தான் நடத்துவார்''
சிரி... சிரி... 

""டேய் உங்க வாத்தியார் ஒரு மாதத்துல சுமாரா எத்தனை பாடம் நடத்துவார்?''
""டாடி... நீங்க தப்பா கேட்குறீங்க... எங்க வாத்தியார் எல்லா பாடத்தையும் சுமாராத்தான் நடத்துவார்''

எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

""பர்சைத் திருடிட்டு ஓடுறான்னு கத்தினதும்... அந்த போலீஸ்காரர் துரத்தினார். ஆனால் பிடிக்கலை''
""பிடிக்க மாட்டாருங்க... அவர் சீரியல் போலீஸ்''

செ.தர்மலிங்கம், திருச்சி-17.


""ஏன்டா பேராண்டி என்ன படிக்கிறே?''
""பி.ஏ. மூணாவது வருஷம் பாட்டி''
""ஏன் ரெண்டு எழுத்தைப் போய் மூணு வருஷம் படிக்கிறே... அது சரி அதை முடிச்சிட்டு அப்புறம் என்ன படிக்கப் போற?''
""அரியர்ஸ்ன்னு ஒரு படிப்பு இருக்கு. அதைப் படிக்கணும்''
"" சரி அதையாவது உருப்படியாப் படி''

எஸ்.கார்த்திக் ஆனந்த், காளனம்பட்டி.

""நேத்து உங்களை மரியாதைக் குறைவாத் திட்டிட்டேன்''
""அதுக்கு மன்னிப்புக் கேட்க வந்திருக்கீங்களா?''
""இல்லை மரியாதையா திட்டிட்டுப் போக வந்தேன்''

பா.ஜெயக்குமார், வந்தவாசி.

""அந்த பிள்ளையார் கோயிலைத் தாண்டினா அடுத்தது நம்ப வீடுதான்''
""அப்ப ஹை ஜம்ப் தெரிஞ்சவங்கதான் உங்க வீட்டுக்கு வர முடியும்ன்னு சொல்லுங்க''

வி.ரேவதி, தஞ்சாவூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com