என்ன மந்திரம் போட்டாளோ!

எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும் வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!
என்ன மந்திரம் போட்டாளோ!

எனக்குமோர் காதல் உண்டு இதயத்தின் உள்ளே தூங்கும்
 வனக்கிளி அவளை இன்னும் மறக்கவே முடிய வில்லை!
 நினைக்கையில் இனிக்கும் அந்த நெய்வாசக் குழலி இன்று
 எனக்கொரு கவிதையானாள்; இதுதான் நான் கண்ட இன்பம் !
 கன்னியின் பெயரைக் கேட்டேன் கருணையின் நிதியம் என்றாள்
 மன்னிய உறவைக் கேட்டேன் மந்திரி குமாரி என்றாள் !
 பன்னி நான் கேட்டபோது பராசக்தி வடிவமென்றாள் !
 சென்னைதான் ஊரா என்றேன் திருவாரூர் நகரம் என்றாள்
 தந்திரம் அறிவாள், மெல்ல சாகசம் புரிவாள் - மின்னும்
 அந்திவான் மின்னல்போல அடிக்கடி சிரிப்பாள் - நானும்
 பந்தயம் போட்டுப் பார்த்துப் பலமுறை தோற்றேன் - என்ன
 மந்திரம் போட்டாளோ என் மனதையே சிறையாய் கொண்டாள்.
 -கவிஞர் கண்ணதாசன்
 ("வனவாசம்' எழதியதற்குப் பின்னர் எழுதிய கவிதை)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com