தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்...

நான் ஒரு வாரப் பத்திரிகையிலே இரண்டு நாட்களுக்கு முன்பு சில கருத்துகளைப் படித்துப் பார்த்தேன்.
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடல்...

நான் ஒரு வாரப் பத்திரிகையிலே இரண்டு நாட்களுக்கு முன்பு சில கருத்துகளைப் படித்துப் பார்த்தேன். மனோன்மணீயம் சுந்தரனார் பாடிய "நீராருங் கடலுடுத்த' என்ற பாடல் குறித்து புலவர் பெருமக்கள் தங்கள் கருத்துகளைக் கூறியிருந்தார்கள். அந்தப் பாடல் மனோன்மணீயம் சுந்தரம் பிள்ளை அவர்களால் இயற்றப்பட்டது.
 தமிழகத்தில் முதலமைச்சர் பொறுப்பை நான் ஏற்றுக் கொண்டிருந்தபோது - அரசு விழாக்களில் - தமிழ்த்தாய் வாழ்த்தாக, பல இடங்களில் பல பாடல்களைப் பாடிக் கொண்டிருக்கிறார்கள்.
 தமிழ்த்தாய் வாழ்த்து என்று நிரந்தரமாக ஒரு வாழ்த்துப் பாடல் தேவை. அது அரசு விழாக்கள் அனைத்திலும் பாடப்பட வேண்டும். விழா இறுதியில் தேசியகீதம் பாடுவதைப் போல, தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து வேண்டும். அதற்கு எந்தப் பாடலைத் தேர்ந்தெடுக்கலாம் என்று பார்த்து, சுந்தரம் பிள்ளை எழுதிய இந்தப் பாடலைத் தேர்ந்தெடுத்தோம்.
 (சென்னை புதுக்கல்லூரியில் 18.2.88 அன்று நடைபெற்ற விழாவில் கலைஞர் ஆற்றிய உரையிலிருந்து...)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com