ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வீரர்கள்

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி முதலில் ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக இருந்தார்.
ஒரே நிறுவனத்தில் பணியாற்றும் வீரர்கள்

கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி முதலில் ரயில்வே துறையில் டிக்கெட் கலெக்டராக இருந்தார். பின்னர் ஏர் இந்தியாவில் சில காலம் வேலை பார்த்தார். தற்போது இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் துணைத் தலைவர். இது பிசிசிஐ மற்றும் ஐசிசியின் முன்னாள் தலைவரான என்.சீனிவாசனின் நிறுவனம்! இதில் வேலையில் சேர்ந்தபோது அவருக்கு அளிக்கப்பட்ட சம்பள விவரம்:
அடிப்படை சம்பளம் - ரூ.43 ஆயிரம்
டி.ஏ. - ரூ.21,970
ஸ்பெஷல் அலவன்ஸ் - ரூ.20 ஆயிரம்
இந்தத் தகவல்களை ஊடகங்களுக்கு அளித்தவர் யார் தெரியுமா? ஐபிஎல் போட்டிகளின் முன்னாள் தலைவர் லலித் மோடி. 
ராகுல் டிராவிட் 1994-ஆம் ஆண்டில் இருந்து இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் ஊழியர். இவரைத் தவிர வி.பி.சந்திரசேகர், தினேஷ் கார்த்திக், லட்சுமிபதி பாலாஜி மற்றும் ஆர்.அஸ்வின் ஆகிய கிரிக்கெட் வீரர்களும் இதே நிறுவனத்தின் ஊழியர்கள் தான்!
ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com