இலக்கியத்தில் அரசியல்
By DIN | Published on : 14th January 2018 12:00 AM | அ+அ அ- |
சிங்கப்பூர் கவிஞர்கள், எழுத்தாளர்கள் தமிழ்நாட்டுத் தலைவர்களைப் பற்றி ஏராளமாக எழுதியிருக்கிறார்கள். லீ குவான் யூவைப் பற்றி கணிசமான கவிதைகள் உண்டு. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த ஆரம்பகால அமைச்சர்கள் பற்றி எழுதப்பட்டவை அதிகம் எனக்குக் கிடைக்கவில்லை. மு.தங்கராசன் என்ற கவிஞர் தனது "இன்பத் திருநாடு' என்ற நூலை அமைச்சரவையில் இருந்த தமிழர் ராஜரத்தினத்திற்கு (அவர் மறைவுக்குப் பின்) சமர்ப்பித்துள்ளார்:
சிந்தனைச் சிற்பி என்றே
சீர்மிகும் சான்றோர் சொல்வார்
பந்தம்சேர் எல்லோ ராலும்
பாராட்டுப் பெற்ற ராஜா
எந்திரம் போன்று ழைத்த
இராஜரத் தினமே உம்மை
வந்தனை புரிந்தே "இன்பத்
திருநாடு' வழங்கு கின்றேன்
மு.தங்கராசன் (2010)