பேல்பூரி

செல்போனில் உள்ள ஒன்றைப் படம் எடுக்க இப்போது அதைப் பதிவிறக்கம் செய்து, பின்னர்தான் பிரிண்ட் எடுக்க முடியும்.
பேல்பூரி

கண்டது
* (பொள்ளாச்சியில் ஒரு மளிகைக் கடையின் பெயர்)
சமாதான பிரபு கடை
வி.தளவாய்துரை, சத்திரபட்டி.

* (திருச்செங்கோடு நகரில் ஒரு பகுதியின் பெயர்)
மோர்பாளையம்
பா.அஷ்டலட்சுமி பாலு, 
கே.செட்டிபாளையம்.

* (நாகர்கோவிலில் உள்ள ஓர் அழகு நிலையத்தின் பெயர்)
சொல்லமாட்டேன் அழகு நிலையம்
ஏ.வி.ஆதிரா, 
வெள்ளம்கோடு.
(திண்டுக்கல்லில் ஒரு குளிர்பான கடையின் பெயர்)
மிஸ்டர் சோடா
எஸ்.சடையப்பன், காளனம்பட்டி.

கேட்டது
* (கோபிசெட்டிபாளையத்தில் ஒரு கரும்பு ஜூஸ்
கடையில் கணவனும், மனைவியும்)
"இங்க பாரு... சொந்தகாரங்கன்னா இப்படித்தான் ஏதாவது பேசிக்கிட்டிருப்பாங்க. நீ எதையுமே காதுல போட்டுக்காதே''
"கம்மலைக் கூடவா?''
க.சங்கர், கோபிசெட்டிபாளையம்.

* (வேலூர் - ஊரிசு கல்லூரி மாணவர்கள் இருவர்)
"மச்சி புதுப்படம் எல்லாம் பார்த்துட்டீயாடா?''
"பார்க்கலை... டைம் இல்லை''
"அப்படி என்னடா பிஸி?''
"தியேட்டர்ல போய் பார்க்காம, போன்லேயே டவுன்லோடு பண்ணி பார்க்கறேன்னு அர்த்தம்பா''
"இதுக்குத்தான் இவ்வளவு பில்டப்பா?''
வெ.ராம்குமார், வேலூர்.

எஸ்எம்எஸ்
காற்றின் அழுக்கைப் போக்க
எந்த சோப்பும் கண்டுபிடிக்கப்படவில்லை...
மரங்களைத் தவிர.
அ.செல்வகுமார், சென்னை-19.

யோசிக்கிறாங்கப்பா!
நெருப்பை நீ 
அணைத்துவிடலாம்!
புகையை
என்ன செய்யப் போகிறாய்?
குலசை நஜுமுதீன், காயல்பட்டினம்.

அப்படீங்களா!
செல்போனில் உள்ள ஒன்றைப் படம் எடுக்க இப்போது அதைப் பதிவிறக்கம் செய்து, பின்னர்தான் பிரிண்ட் எடுக்க முடியும். இப்போது வந்துள்ள போர்ட்டபிள் பிரிண்டர் மூலம் செல்போனில் உள்ளவற்றை நேரடியாகவே பிரிண்ட் எடுத்துக் கொள்ள முடியும். இந்த பிரிண்டருக்கு இங்க் எல்லாம் தேவையில்லை. பலவித வண்ணங்களில் ஸிங்க் போட்டோ பேப்பரில் பிரிண்ட் வந்துவிடும். 20 பிரிண்ட் எடுக்கும் வரை இந்த பிரிண்டரில் உள்ள பேட்டரியின் சார்ஜ் இருக்கும். ஒரு செல்போனின் அளவே உள்ள இந்த பிரிண்டரில் இருந்து 5 x 7 செ.மீ. அளவுள்ள பிரிண்ட்கள் வெளிவரும். பல நிறுவனங்கள் இது போன்ற பிரிண்டர்களைத் தயாரிக்கின்றன. 
என்.ஜே., சென்னை-116

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com