குறுந்தகவல்கள்

உலகிலேயே காசு பரிவர்த்தனை இல்லாமல் முற்றிலும் டிஜிட்டல் மயமான நாடு ஸ்வீடன். இங்கு எல்லோருக்கும் இணையதளம் உள்ளது.
குறுந்தகவல்கள்

• பிரகாஷ், அசோக், ஸ்ரீசந்த் மற்றும் கோபிசந்த் ஆகியோர் சகோதரர்கள். ஆனால் இவர்கள் வேறொரு பெயரில் மிகவும் பிரபலம். அது ஹிந்துஜா சகோதரர்கள். கடந்த பல ஆண்டுகளாக பிரிட்டனின் முதன்மை பணக்காரர்களாக இருந்தவர்கள். தற்போது இந்த இடத்தை ஜிம் ராட்கிளிப்பி என்பவர் பிடித்துள்ளார். ஜிம் .. கெமிக்கல் எஞ்சீனியரிங் தொழிலில் ஏகமாய் சம்பாதித்து ; 16 வது இடத்திலிருந்து முதலிடத்துக்கு வந்துவிட்டார்.
- ராஜிராதா
************
• உலகிலேயே காசு பரிவர்த்தனை இல்லாமல் முற்றிலும் டிஜிட்டல் மயமான நாடு ஸ்வீடன். இங்கு எல்லோருக்கும் இணையதளம் உள்ளது.
- வி.ந. ஸ்ரீதரன்

• இந்தியாவின் முதல் கல்வி அமைச்சர் அபுல் கலாம் ஆசாத். அவரின் இயற்பெயர் மொஹினுதீன். உருது மொழியில் மிக நன்றாகப் பேசும் வல்லமை பெற்றதால் "பேச்சின் தந்தை' என்று பொருள்படும் அபுல் கலாம் என்று அழைத்தனர். அதுவே பின்னாளில் அவர் பெயராகிவிட்டது.
*************
• மார்க்கிஸ்ட் கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளர் சீத்தாராம் எச்சூரி சென்னை அரசு பொது மருத்துவமனையில் பிறந்தவர்.
- வி.ந. ஸ்ரீதரன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com