பேல்பூரி

"வயதானால் மூளை சரியாக வேலை செய்யாது' என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர்.
பேல்பூரி

கண்டது
• (பல்லடம் பேருந்துநிலையம் அருகில் உள்ள டிவி ஷோ ரூமின் பெயர்)
வளர்பிறை வானொலியகம்
எம்.கருப்பையா, திருப்பூர்.

• (தொண்டியில் உள்ள உணவகம் ஒன்றின் பெயர்ப் பலகையில்)
பொதுமக்கள் துணை
குரு.கருப்பசாமி, நம்புதாளை.

• (புதுக்கோட்டையில் ஓர் இருசக்கர வாகனத்தில்)
ஒருவன் அடைவதைக் கண்டு 
பொறாமைப்படாதீர்கள்.
அவன் இழந்தது தெரிந்தால்...
அடைய வேண்டும் என்ற 
ஆசையே வராது.
ஏ.எம்.ஷெரீப், புதுக்கோட்டை.

• (பெருந்துறை - கோவை சாலையில் ஓர் ஊரின் பெயர்)
மைல் கல்
எஸ்.அருள்மொழி சசிகுமார், கம்பைநல்லூர். 

கேட்டது
• (துறையூர் தனியார் மருத்துவமனை அருகில் இருவர்)
"உடலில் சத்து குறைஞ்சிடுச்சுன்னு டாக்டர் கிட்டே போனியே என்ன ஆச்சு?''
"சொத்து குறைஞ்சு போச்சு''
துரை.இராமகிருஷ்ணன், எரகுடி.

• (சென்னை மெரினா கடற்கரையில் இளம்பெண்கள் இருவர்)
"அடிக்கடி யாரோ ஒருத்தன் உனக்கு மெசேஜ் அனுப்புறதாச் சொன்னீயே அதை நிறுத்த ஒரு சூப்பரான வழி சொல்லவா?''
"சொல்லு''
"அவனோட நம்பருக்கு வாட்ஸ் அப்-இல் உன் போட்டோ ஒன்னை அனுப்பி வைச்சிடு. அப்புறம் மெசேஜ் வரவே வராது''
நெ.இராமன், சென்னை-74. 

எஸ்எம்எஸ்
சாதனைக்கு சோதனை
எப்போதும் சொந்தக்காரன்.
ஏ.எஸ்.இராஜேந்திரன், வெள்ளூர்.

யோசிக்கிறாங்கப்பா!
குடிகாரன் பேச்சு 
விடிஞ்சாலே போச்சு.
குடிகாரன் மூச்சு
பாதி வயசிலேயே போச்சு
குடிகாரன் வீடு 
விடியாமலே போச்சு.
மு.பெரியசாமி, 
விட்டுக்கட்டி.

அப்படீங்களா!
"வயதானால் மூளை சரியாக வேலை செய்யாது' என்று பலர் நம்பிக் கொண்டிருக்கின்றனர். வயதானவர்கள் நான்கு பேருடன் பழகாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடந்தால், ஒருவேளை அப்படி ஆகலாம். சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள "மியாமி மில்லர் ஸ்கூல் ஆப் மெடிசின்' ஓர் ஆய்வை நடத்தியுள்ளது. சராசரி 73 வயதுள்ள 11 ஆயிரம் பேரை ஆய்வு செய்தது. அதன்படி வாரத்துக்கு 52 மணி நேரம் உடற்பயிற்சி செய்யும் முதியவர்களின் ரத்த ஓட்டம் மேம்பாடு அடைந்து அவர்களின் மூளையின் செயல் திறனும் அதிகரித்திருக்கிறதாம். பிற உடற்பயிற்சிகளை விட, யோகாசனம் போன்ற மனம்சார்ந்த உடற்பயிற்சி மூளையின் செயல்திறனை நன்கு மேம்படுத்தியுள்ளதையும் கண்டறிந்துள்ளார்கள். 
என்.ஜே., சென்னை-69.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com