பேல்பூரி

"நான் நெருப்பாற்றில் நீந்தி வந்தவன்'' என்று சிலர் பெருமையாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்
பேல்பூரி

கண்டது
• (கொடைக்கானலில் ஒரு கூல் ட்ரிங்ஸ் கடையின் பெயர்)
தம்பீஸ் ரிலாக்ஸ் கார்னர்
வி.கண்ணகி செயவேலன், அரக்கோணம்.

• (திருவாரூரில் ஓர் இருசக்கர வாகனத்தின் பின்புறத்தில்)
AVOID GIRL FRIENDS
SAVE PETROL
வரதன், திருவாரூர்.

• (செட்டிக்குளம் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் கண்ட அறிவிப்பு)
அரை அடி குழி தோண்டி
ஆளுக்கொரு மரம் நட்டிருந்தால்...
600 அடிக்குப் போர் போட 
அவசியம் வந்திருக்காது.
ஜி.ராஜா, விருதுநகர்.

கேட்டது
• (ஈரோடு மாடுசிலை அருகே இரு பெண்கள்)
"பஸ்சுக்காக எதுக்குங்க இவ்வளவு நேரமா காத்துக் கெடக்குறீங்க? ஒங்க மருமகளுக்குப் போன் பண்ணினா அவ ஸ்கூட்டரில் வந்து கூட்டி போகமாட்டாளாக்கும்?''
"அய்யய்யோ... வேணாம்டியம்மா... பஸ்சுலேயே "பத்திரமா' போய்க்கிறேன்''
எஸ்.வளர்மதி, ஈரோடு.

• (தனியார் மருத்துவமனையில் டாக்டரும் நோயாளியும்)
"டாக்டர் சார்... உங்க கிளினிக்கை கீழ்த்தளத்தில் வைக்கக் கூடாதா?''
"ஏன்... இது வசதியாகத்தானே இருக்கு?''
"படி ஏறுற இடத்தில் "மேலே போகும் வழி'ன்னு போர்டு மாட்டி வெச்சிருக்கீங்களே... அதான்''
மு.முத்துராம் சுந்தர், செங்கோட்டை.

எஸ்எம்எஸ்
வாசனை என்பது சில நிமிடம் வரை...
வறுமை என்பது சில காலம் வரை...
அழகு என்பது வயது உள்ளவரை...
நல்ல நட்பு என்பது உயிர் உள்ளவரை.
துரை.செளந்தரராசன், காஞ்சிபுரம்.

யோசிக்கிறாங்கப்பா!
நாய் நன்றியுள்ளது என்பது ஒன்றும் 
பெரிய அதிசயம் இல்லை.
இத்தனை காலம் மனிதர்களோடு இருந்தும் 
அது நன்றியோடு இருப்பதுதான் 
அதிசயம்.
வேலுசாமி, பொள்ளாச்சி.

அப்படீங்களா!
"நான் நெருப்பாற்றில் நீந்தி வந்தவன்'' என்று சிலர் பெருமையாகச் சொல்வதைக் கேள்விப்பட்டிருப்பீர்கள். உண்மையில் எரியும் நெருப்பின் நடுவே நடந்து செல்கிறது இந்த ரோபோ. 
அமெரிக்காவின் மிக்சிகன் பல்கலைக்கழகத்தின் ரோபோ துறையினர் இந்த ரோபோவை வடிவமைத்துள்ளனர். தீ விபத்து ஏற்படுகிறபோது மனிதர்கள் செய்ய முடியாத மீட்பு நடவடிக்கைகளை இந்த ரோபோ செய்துவிடுமாம். இந்த ரோபோவின் சிறப்பு அம்சம் என்னவென்றால், சாதாரணமாக நடந்து செல்லும்போது, தீ எரியும் பகுதியை நோக்கித் தானாகவே இந்த ரோபோ நடந்து செல்லும் விதத்தில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மனிதர்கள் சுமந்து செல்ல முடியாத பெரிய, எடையுள்ள பொருட்களை இந்த ரோபோட் சுமந்து செல்லும். களைப்படையாது. 
என்.ஜே., சென்னை-116.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com