மைக்ரோ கதை

பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அவனுடைய அம்மா,
மைக்ரோ கதை

பள்ளிக்கூடம் போய்விட்டு வந்த மோகன் சோகமாக உட்கார்ந்திருந்தான். அவனுடைய அம்மா,
" என்னடா கண்ணு... எதுக்கு கவலையா இருக்கே?'' என்று கேட்டாள். 
அதற்கு அவன், " செல்- ன்னா என்னம்மா?''' என்று கேட்டான். 
" இது தெரியாதா? செல்ன்னா செல்போன்'' என்றாள் அம்மா.
" எங்க ஸ்கூலிலே பயாலஜி டீச்சர் செல்ன்னா உயிர் அணுன்னு சொல்றாங்க. ஃபிசிக்ஸ் டீச்சர் பேட்டரின்னு சொல்றாங்க. மேத்ஸ் டீச்சர் செல்ன்னா விற்பனைன்னு சொல்றாங்க. செல்ன்னா ஜெயில்ன்னு ஹிஸ்டரி டீச்சர் சொல்றாங்க. தமிழ் டீச்சர் செல் என்றால் போ என்று அர்த்தம்ன்னு சொல்றாங்க. அஞ்சு டீச்சரும் அஞ்சுவிதமாச் சொல்றாங்க. ஒரே டென்ஷனாயிருக்கு'' என்றான்.
அ.ப.ஜெயபால், கொள்ளிடம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com