சிரி... சிரி... சிரி... சிரி...  

நடந்துவரும் குடிகாரர்: என்ன ஆச்சரியம்... பிளாட்பாரத்துல ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்க? 
சிரி... சிரி... சிரி... சிரி...  

* "டாக்டர் எனக்கு வயித்துல கடாபுடான்னு சத்தம் கேட்குது''
"அய்யய்யோ... சரி சீக்கிரமா இந்த பஞ்சை எடுத்துக் காதுல வச்சுக்கோங்க. எந்தச் சத்தமும் கேட்காது''
அ.ப.ஜெயபால், கொள்ளிடம்.

* நடந்துவரும் குடிகாரர்: என்ன ஆச்சரியம்... பிளாட்பாரத்துல ஸ்பீடு பிரேக்கர் போட்டிருக்காங்க?
நடைபாதையில் படுத்திருக்கும் குடிகாரர்: யோவ் யாருய்யா... படுத்திருக்கிறது தெரியாம மிதிச்சிட்டுப் போறது?
அ.ராதா, கொள்ளிடம்.

* "ஆபரேஷன் செய்த பின்னாடி எந்த பெட்டுல போடுவீங்க டாக்டர்?''
"ஆபரேஷனுக்கு முன்னாடி கீழ்பெட்டுல இருப்பீங்க... அப்புறம் மேலே போயிடுவீங்க''
ஜெ.சசிகலா, கொள்ளிடம்.

* "அந்தத் திருடன் திருடிய வீட்டு வாசலிலேயே மயங்கி விழுந்து செத்துட்டானாம்''
"அந்த வீட்டு அம்மா செய்திருந்த பலகாரத்தைச் சாப்பிட்டுவிட்டானாம்''
உமா புருஷோத்தமன், ஆதிச்சபுரம்.

* "செயினை அறுத்துக்கிட்டு ஜித்து ஓடறான்... பிடிங்க... பிடிங்க''
"கழுத்துச் செயினையாம்மா?''
"இல்லே... எங்க வீட்டு நாய் பேரு ஜித்து.''
ஆர்.யோகமித்ரா, சென்னை-73.

* "ஆகாயம் கீழே இறங்கினா என்ன ஆகும்?''
"பூமி இன்னும் கீழே போயிடும்.''
பர்வதவர்த்தினி, சென்னை.

* "சிம்கார்டை விழுங்கிவிட்ட உன் பையனின் வாயைப் பொத்திக்கிட்டே டாக்டரிடம் அழைத்துச் செல்கிறாயே... ஏன்?''
"அவன் பேசும்போது சிம்மில் உள்ள பேலன்ஸ் குறைஞ்சிடக் கூடாதே.''
நாஞ்சில் சு.நாகராஜன், பறக்கை.

* "மக்கள் விருப்பத்தை ஏற்க முடியாதுன்னு மன்னர் சொல்லிட்டாரா?''
"ஆம். போர்க்களத்திலிருந்து அவர் ஓடி வருவதை நேரலையாக ஒளிபரப்பும்படி கேட்டார்களாம்.''
பி.பாலாஜி கணேஷ், கோவிலாம்பூண்டி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com