பேல்பூரி

"ஐந்து ஏக்கர் நிலத்தில் வழக்கமான பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி பூச்சி மருந்து அடித்தால் அந்த இயந்திரம் ஓடுவதற்கு சுமார்
பேல்பூரி

கண்டது
* (வேலூர் - சென்னை சாலையில் ஓர் உணவகத்தின் பெயர்)
HOTEL NH 45
கி.பழநி, வேலூர்-9.

* (மதுரை பெண்கள் யாதவர் கல்லூரி எதிரே உள்ள ஒரு கடையின் பெயர்)
அகராதி ஸ்டோர்
எம்.வீ.மதுரைச்சாமி, கள்ளந்திரி, மதுரை.

* (திருப்பூரில் உள்ள ஒரு ரெடி மேட் ஆடை கடையின் பெயர்)
சொக்கா
யோ.ஜெயந்திராஜன், குனியமுத்தூர்.

கேட்டது
* (மதுரை மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஒரு தேநீர்க் கடை உரிமையாளரும், அவருடைய நண்பரும்)
"என்னடா மாப்ளே... கடை உரிமையாளர் கோ.ந.மணின்னு கொட்டை எழுத்துல போட்டிருக்கே?''
"ஆமான்டா... ஏற்கெனவே மணி டீ ஸ்டால்ங்கிற பெயரில ஒரு கடை இருக்கு. வித்தியாசம் தெரியுறதுக்காகத்தான் அப்படி இனிஷியலோட போட்டிருக்கேன்''
"எல்லாம் ஓகேதான்.... உன் பெயரை இனிஷியலோடு வேகமாய்ப் படித்துப் பாரு.... கோண மணின்னு வருது''
மகேஷ் அப்பாசுவாமி, பனங்கொட்டான்விளை.

• (மேல்மருவத்தூர் அருகே உள்ள சோத்துப் பாக்கத்தில் நடுத்தர வயதுடைய இரு ஆண்கள்)
"கல்யாண வீட்டிலேயிருந்து என் பின்னாடியே வர்றீங்களே? நீங்க மாப்பிள்ளைக்குச் சொந்தக்காரரா? இல்லை பெண் பிள்ளைக்குச் சொந்தக்காரரா?''
"நீங்க கால்ல போட்டிருக்கீங்களே... அந்தச் செருப்புக்குச் சொந்தக்காரன்''
செல்.பச்சமுத்து, சென்னை-52.

யோசிக்கிறாங்கப்பா!
நிலத்தால் சோறுபோடுபவன்
ஏழையாகிறான்....
நிலத்தைக் கூறு போடுபவன்
பணக்காரனாகிறான்.
ப.சரவணன், ஸ்ரீரங்கம்.

எஸ்எம்எஸ்
நிம்மதிக்கான இரண்டு வழிகள்..
விட்டுக் கொடுங்கள்...
இல்லை...
விட்டுவிடுங்கள்.
கே.முத்துலெட்சுமி, திருவாடானை.

அப்படீங்களா!
"ஐந்து ஏக்கர் நிலத்தில் வழக்கமான பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரத்தைப் பயன்படுத்தி பூச்சி மருந்து அடித்தால் அந்த இயந்திரம் ஓடுவதற்கு சுமார் ரூ.1000க்கு பெட்ரோல் அல்லது டீசல் வாங்க வேண்டியிருக்கும். ஆண்டுக்கு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.20 ஆயிரம் வரை பெட்ரோல், டீசலுக்கே செலவு செய்ய வேண்டியதிருக்கும். ஆனால் நான் கண்டுபிடித்திருக்கிற இயந்திரத்தைப் பயன்படுத்தினால், வெறும் ரூ.5000 மட்டுமே செலவு ஆகும். அதுவும் அந்த இயந்திரத்தை வாங்கும் செலவுதான்'' என்கிறார் தெலங்கானாவைச் சேர்ந்த மல்லேஷ்.
மல்லேஷ் கண்டிபிடித்திருப்பது சூரிய ஒளி சக்தியின் மூலம் இயங்கும் பூச்சி மருந்து அடிக்கும் இயந்திரம். வெறும் 9 ஆம் வகுப்பே படித்திருக்கும் அவருக்கு இந்த கண்டுபிடிப்புக்காக கெüரவ டாக்டர் பட்டம் கொடுத்திருக்கிறது, செகந்திராபாத்தில் உள்ள யுனைட்டெட் தியாலஜிகல் பல்கலைக்கழகம். 
3000 இயந்திரங்களுக்கான ஆர்டரை கைவசம் வைத்துள்ள மல்லேஷ் முழுமூச்சாக அவற்றை செய்து முடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். 
என்.ஜே., சென்னை-69.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com