விளையாட்டில் ஜொலித்த மூவர் குழு!

இந்திய கிரிக்கெட் குழு இன்று எழுந்து கம்பீரமாக நடைபோடுகிறது என்றால் இதற்குக் காரணமே இந்த மூவரும்தான்.
விளையாட்டில் ஜொலித்த மூவர் குழு!

கிரிக்கெட்
சௌரவ் கங்குலி - ராகுல் திராவிட் - சச்சின் டெண்டுல்கர்
இந்திய கிரிக்கெட் குழு இன்று எழுந்து கம்பீரமாக நடைபோடுகிறது என்றால் இதற்குக் காரணமே இந்த மூவரும்தான். இவர்கள் ஒரேசமயம் இணைந்து, இந்தியக் குழுவை உயர்த்தினர்.  சௌரவ் கங்குலி, இந்தியக் குழுவை கேப்டனாக வழி நடத்திச் செல்வதில் வல்லவராக இருந்தார்.  ராகுல் திராவிட் சுவர்போல் நின்று எதிர் அணியின் பந்து வீச்சை சமாளித்து, அதேசமயம் இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்கோரை பலமுறை உயர்த்தினார்..!  சச்சின் டெண்டுல்கரோ தன்னுடைய மாஸ்டர் ஆட்டத்தால், எதிர் அணியினர் அனைவரையும் நிலைகுலைய வைத்தார். இந்த மூவரும் இணைந்து ஜொலித்தபோதுதான் "பங்ஹம் ஐய்க்ண்ஹ'' அணி என புகழ்ந்து பேசப்பட்டது. அதற்கு அந்தஸ்தும் கிடைத்தது!

கால்பந்து 
ரிவால்டோ-ரொனால்டோ- ரொனால் டினோ 
கால்பந்து என்றாலே அனைவருக்கும் பிரேசில்தான் நினைவுக்கு வரும். 2002-ஆம் ஆண்டு பிரேசில் அணி சாம்பியன் ஆனது. அதில் இந்த மூன்று பேருக்கும் முக்கிய இடம். இவர்கள் "3த' எனச் செல்லமாக அழைக்கப்பட்டனர்.  பொதுவாக ரொனால்டோவும் ரிவால்டோவும் எப்போது யார் சிறப்பாக விளையாடினாலும் மற்றவர்களைப் புகழ்ந்து பரஸ்பரம் தட்டிக் கொடுத்துக்கொள்ள  மறக்க மாட்டார்கள். இந்த அழகில் ரொனால் டினோவும் சேர்ந்தபோது, மூவரும் இணைந்து பிரேசிலுக்கு உலகக் கோப்பையையே பெற்றுத் தந்துவிட்டனர்!  இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 40 கெஜ தூர ஃப்ரீ-கிக் வாய்ப்பில் கோல் அடித்து அசத்தினார் ரொனால் டினோ! ரிவால்டோ மற்றும் ரொனால்டோ ஆட்டமும் அப்போது உச்ச நிலையில் இருந்ததால் வெற்றி எளிதாக இருந்தது!

கூடைப் பந்து
மைக்கேல் ஜோர்டன்- ஸ்காட்டி பிபென் - டெனிஸ் ராட்மேன் 
மைக்கேல் ஜோர்டன் மட்டும் தன்னுடைய ஓய்வை திடீரென அறிவித்திருக்காவிடில் இந்த மூவரின் ஆட்டம் மேலும் சில ஆண்டுகளுக்கு நிச்சயம் ஜொலித்திருக்கும்..!  இவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு இணைந்து விளையாடினர். இந்தச் சமயத்தில் பங்கேற்ற மூன்று சாம்பியன்ஷிப்களிலும் வென்றனர்.  1995-96-இல் தொடர்ந்து வெற்றிகளைக் குவித்த பெருமை இந்த மூவர் குழுவுக்கு உண்டு.  ஜோர்டன் "ஷூட்' போடுவதில் மன்னர்!  ஸ்கெட்டி பிபென் தடுத்தாடுவதில் சூரர்.  ராட்மேன்... எதிர்அணியை பிளந்துகொண்டு முன்னேறி சாதிப்பதில் வல்லவர். ஆக, இந்த மூவரும் ஒரே அணியில் இருந்தால் எதிர் அணி ஜெயிப்பது எளிதல்ல.
-ராஜேஸ்வரி ராதாகிருஷ்ணன்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com