அறிமுகமே அசத்தல்

"மீசைய முறுக்கு' படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் ஆனந்த்ராம் நடிப்புக்கு பரவலான பாராட்டுக்கள் எழுந்துள்ளன.
அறிமுகமே அசத்தல்

"மீசைய முறுக்கு' படத்தின் மூலம் அறிமுகமாகியிருக்கும் ஆனந்த்ராம் நடிப்புக்கு பரவலான பாராட்டுக்கள் எழுந்துள்ளன. ஹிப்ஹாப் ஆதிக்கு தம்பியாக  நடித்துள்ள இவர் தனது சினிமா பிரவேசம் பற்றி பேசும் போது...  "நடிக்க வேண்டும் என்ற ஆசை சிறு வயதில் இருந்தே இருந்தது.   விஸ்காம் படித்து முடிக்கும் போது கூத்துப்பட்டறை, அல்கமி, லண்டன் டிரினிட்டி உள்ளிட்ட பள்ளிகளில் நடிப்பு குறித்த பயிற்சிகளை பெற்றேன். 4 ஆண்டுகளுக்கு மேலாக கடின பயிற்சிகள் பெற்று சினிமா தேடலில் இருந்தேன். நண்பர்கள் உதவியுடன்  "மீசைய முறுக்கு' வாய்ப்பு கிடைத்தது.  ஆதியின் தம்பியாக நடித்தேன். படப்பிடிப்பு முழுவதும் இளைஞர் பட்டாளம் என்பதால் சந்தோஷமாக இருந்தது.   விவேக்  பல இடங்களில் எங்களுக்கு உதவி செய்தார்.  இந்த படத்தை தியேட்டரில் ரசிகர்களுடன் பார்த்தேன். ஒரு அறிமுக நடிகர் என்றில்லாமல் ரசிகர்கள் நான் வரும் காட்சிகளில் கை தட்டி விசில் அடித்த அனுபவம் எனக்குள் சிலிர்ப்பை தந்தது. ஆதிக்கு என் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். தொடர்ந்து திரையுலகில் நல்ல கதாபாத்திரங்களில் நடித்து குணசித்திர நடிகராகவும், வில்லன் நடிகராகவும் சாதிக்க ஆசைப்படுகிறேன்'' என்றார் ஆனந்த்ராம். தமிழைத் தொடர்ந்து தெலுங்கிலும் ஒரு பட வாய்ப்பு ஆனந்த்ராமை தேடி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com