இனிமே சொல்லாதீங்க... 

பகலில் யாராவது மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றால், "ஹலோ... விளக்கை அணைங்க''ன்னு
இனிமே சொல்லாதீங்க... 

பகலில் யாராவது மோட்டார் சைக்கிளில் முகப்பு விளக்கை எரிய விட்டபடி சென்றால், "ஹலோ... விளக்கை அணைங்க''ன்னு யாரும் சைகை காட்டவேண்டாம். Apache RTR ரக மோட்டார் சைக்கிள்கள் பகலிலும் விளக்கு எரியும் வகையில் உருவாக்கப் படுகிறது.  அண்மையில் புதிய மோட்டார் சைக்கிள் வாங்கிய இளைஞர் பகலில் வாகனத்தை ஓட்டிச்சென்றபோது,   எதிரில் வந்தவர்கள் அவரிடம் "விளக்கு எரியுது அணைங்க...' என்று வழிநெடுகிலும் கூறினர். அவர் விளக்கை அணைக்க பல முயற்சிகள் செய்தும் அணைக்க முடியவில்லை.  வாகனத்தில் ஏதோ கோளாறு உள்ளது என்று வாகன விற்பனையாளரிடம் புகார் கூறியிருக்கிறார்.  

அப்போது விற்பனையாளர், "கோளாறு எதுவும் இல்லை. அரசு உத்தரவின்படி இந்த புதிய தொழில்நுட்பம் வாகனத்தில் சேர்க்கப்பட்டிருக்கிறது. இந்த ஆண்டு ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு தயாராகி விற்பனைக்கு வரும் அனைத்து இரு சக்கர வாகனங்களிலும் இந்த தொழில் நுட்பம் இணைக்கப்பட்டிருக்கும். வாகனத்தை இயக்கத் தொடங்கியதும், விளக்கும் தானாகவே எரிய ஆரம்பித்துவிடும். இதனால் பேட்டரியின் ஆயுளில் குறைபாடு எதுவும் ஏற்படாது. எரிபொருளும் வீணாகாது'' என்று விளக்கம் அளித்திருக்கிறார்.    

வாகன தயாரிப்பு நிறுவனங்களிடம் இது குறித்து விசாரித்தபோது, "சாலை பாதுகாப்பு தொடர்பாக உச்ச நீதி மன்றம் நியமித்த குழுவின் பரிந்துரையின்படி இந்த தொழில்நுட்பத்தை கட்டாயம் செயல்படுத்த வேண்டும் என்ற உத்தரவை அரசு பிறப்பித்துள்ளது. சாலை விபத்துகளில் அதிக அளவில் உயிரிழப்பு ஏற்படுவது இருசக்கர வாகனங்களால்தான். 2014-ஆம் ஆண்டில் மட்டும் 32,524 பேர் உயிரிழந்துள்ளனர். 1.27 லட்சம் பேர் காயமடைந்துள்ளனர். அதிகாலை மற்றும் மாலை நேரங்களில் முகப்பு விளக்கு எரிவதால் சாலை விபத்துகள் குறையும் என்று நிபுணர் குழு பரிந்துரைத்துள்ளது. இதன் அடிப்படையில் AHO (Automatic Headlight On / All time Headlight On) என்னும் புதிய தொழில் நுட்பத்தின்படி எல்இடி விளக்குகள் வாகனம் இயங்கும்போதெல்லாம் எரியும். வாகனம் ஓட்டுபவர்கள் இதை அணைத்துவிட்டு வாகனத்தை இயக்கமுடியாது. இரவில் வெளிச்சத்தை கூட்டவும், குறைக்கவும் முடியும். "விபத்தை தவிர்க்கவே விளக்கு எரிகிறது' என்ற விழிப்புணர்வை  அனைவரும் பெறவேண்டும்''  என்கிறார்கள்.
-ரவி வர்மன்.
படம்: அண்ணாமலை
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com